Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அவுட்.. பிளே ஆப் வாய்ப்பு காலி.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேர வலி!

அபுதாபி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகள் பெற்றதை அடுத்து 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது.

இதைப் பற்றித் தான் "வலி நிறைந்த 12 மணி நேரம்" என முன்பே தோனி பேசி இருந்தார்.

சிஎஸ்கே நிலை

சிஎஸ்கே நிலை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் தருவாயில் இருந்தது. எனினும், சிஎஸ்கே தொடர்ந்து வெற்றி பெற்று, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் தோல்வி அடைந்தால் சிஎஸ்கே அணிக்கு குறுகிய அளவில் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு இருந்தது.

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

இந்த நிலையில், சிஎஸ்கே அணி பெங்களூர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதை அடுத்து புள்ளிப் பட்டியலில் 12 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் இருந்தது சிஎஸ்கே. ராஜஸ்தான் அணி 11 போட்டிகளில் 8 புள்ளிகள் பெற்று இருந்தது.

மும்பை தோல்வி

மும்பை தோல்வி

ராஜஸ்தான் அணி மும்பை அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் அந்த அணி புள்ளிப் பட்டியலில் 12 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்று தன் பிளே-ஆஃப் செல்ல இருக்கும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

பிளே-ஆஃப் வாய்ப்பு

பிளே-ஆஃப் வாய்ப்பு

அதே சமயம், சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்ல இருந்த கடைசி வாய்ப்பை இழந்தது. இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால், சிஎஸ்கே அணி ஆடி முடித்த அடுத்த போட்டியிலேயே ராஜஸ்தான் அணி, அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பை காலி செய்தது.

தோனி என்ன சொன்னார்?

தோனி என்ன சொன்னார்?

சிஎஸ்கே அணியின் இந்த பிளே-ஆஃப் பற்றி பெங்களூர் போட்டியின் வெற்றிக்கு பின் கேப்டன் தோனி பேசினார். அவர் கூறுகையில், பிளே-ஆஃப் செல்ல இருக்கும் குறுகிய வாய்ப்புக்கான கணக்குகளை விடுங்கள். நங்கள் பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பே இல்லை என்றார்.

வலி நிறைந்த 12 மணி நேரம்

வலி நிறைந்த 12 மணி நேரம்

நன்றாக ஆடியும் போட்டியை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல ,முடியாதது காயம் ஏற்படுத்தும் விஷயம். எங்களுக்கு இன்னும் வலி நிறைந்த 12 மணி (போட்டி) நேரம் உள்ளது. அப்போது நாங்கள் போட்டியை அனுபவித்து ஆட வேண்டும் என்றார் தோனி.

பரிதாப நிலையில் சிஎஸ்கே

பரிதாப நிலையில் சிஎஸ்கே

தோனி கூறிய சில மணி நேரங்களில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இது தோனியின் கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கக் கூடும் என்ற நிலையில் சிஎஸ்கே அணி பரிதாப நிலையில் உள்ளது.

Story first published: Monday, October 26, 2020, 9:06 [IST]
Other articles published on Oct 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+