Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிராவோ போனாலும் இப்படித்தானா?.. ரெய்னா சென்ற போது செய்த அதே தவறை.. மீண்டும் செய்த சிஎஸ்கே.. பின்னணி

துபாய்: சிஎஸ்கே அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் ஆட முடியாத நிலையில் இருக்கிறார். இந்த தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் இவர் ஆடுவதே சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள்.

சிஎஸ்கே அணியில் அடுத்தடுத்த பிரச்சனைகள், குழப்பங்கள் நடந்து வருகிறது. அடுத்தடுத்த தோல்விகள் சிஎஸ்கே அணியை ஒரு பக்கம் முடக்கி போட்டுள்ளது.

ராஜஸ்தான், ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர், டெல்லி என்று நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு முக்கியமான அணிகளிடம் எல்லாம் சிஎஸ்கே தோல்வி அடைந்துவிட்டது. இதனால் சிஎஸ்கேவின் பிளே ஆப் கனவே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

கேள்வி

கேள்வி

நிலைமை இப்படி இருக்க இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணியில் இருக்கும் முக்கியமான வீரர்களான ரெய்னா, ஹர்பஜன் இந்த தொடரின் தொடக்கத்தில் வெளியேறினார்கள். முக்கியமாக ரெய்னா வெளியேறியது சிஎஸ்கே அணிக்கு பெரிய பாதிப்பை கொடுத்தது. சிஎஸ்கே அணியின் சமநிலையை இந்த வெளியேற்றம் உடைத்து போட்டது.

தவறு

தவறு

ரெய்னா வெளியேறிய போது சிஎஸ்கே அணி அவருக்கு மாற்று வீரரை எடுத்து இருக்கலாம். இந்திய வீரர் ஒருவரை அணியில் எடுத்து இருக்க முடியும். ஒன் டவுன் இறங்குவதற்கு ஏற்ற அனுபவம் வாய்ந்த வீரர் ஒருவரை அணிக்குள் எடுத்து இருக்க முடியும். ஆனால் சிஎஸ்கே இதை செய்யவில்லை.

செய்யவில்லை

செய்யவில்லை

அணிக்குள் மாற்று வீரர் யாரையும் கொண்டு வர சிஎஸ்கே நினைக்கவில்லை. ரெய்னா போனாலும் சமாளிப்போம் என்று சிஎஸ்கே பிடிவாதமாக இருந்தது. அதேபோல் ஹர்பஜனும் அணியில் இருந்து வெளியேறினார். அவருக்கும் சிஎஸ்கே எந்த விதமான மாற்று வீரரையும் எடுக்கவில்லை. இப்போதும் சரியான ஸ்பின் பவுலர் இல்லாமல் சிஎஸ்கே கஷ்டப்பட்டு வருகிறது.

என்ன

என்ன

தற்போது இதேபோல் சிஎஸ்கே அணியில் பிராவோ ஆட முடியாத நிலையில் உள்ளார். கடந்த போட்டியில் காயம் காரணமாக இவர் பாதியில் வெளியேறினார். இதனால் இன்னும் 2 வாரங்களுக்கு இவர் ஆட முடியாது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மீதம் இருக்கும் போட்டிகளில் இவர் ஆடுவதே சந்தேகம்தான் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் இவருக்கு மாற்று வீரர் யாரையும் எடுக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது. சிஎஸ்கே அணியின் சிஇஓ இதை உறுதி செய்துள்ளார். பிராவோவிற்கு மாற்றாக யாரையும் அணியில் எடுக்க போவது இல்லை என்று கூறியுள்ளார். இதன் காரணமாக சிஎஸ்கே அணியில் மேலும் ஒரு வீரருக்கான இடம் காலியாகும் நிலையில் உள்ளது.

காலியாகிறது

காலியாகிறது

பிராவோ இடம் காலியாக வாய்ப்பு இருக்கும் போதும் கூட சிஎஸ்கே அணி நிர்வாகம் அவருக்கு மாற்று வீரரை எடுக்க முன்வரவில்லை. கூடுதலாக ஒரு வீரரை அணியில் எடுத்து வைத்தால் அது அணிக்குதான் நல்லது. கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற அணிகள் உடனே உடனே மாற்று வீரர்களை அறிவிக்கிறது. ஆனால் சிஎஸ்கே ஏனோ புதிதாக வீரர்களை அணிக்குள் கொண்டு வர மறுக்கிறது.

Story first published: Monday, October 19, 2020, 20:21 [IST]
Other articles published on Oct 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+