Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இருவரும் இனி ஆட முடியாது.. மொத்தமாக கதை முடிகிறது.. "டெர்மினேட்" முடிவை கையில் எடுக்கும் சிஎஸ்கே!

துபாய்: முக்கியமான அதிரடி முடிவு ஒன்றை சிஎஸ்கே அணி நிர்வாகம் விரைவில் எடுக்க போவதாக தகவல்கள் வருகிறது.

2020 ஐபிஎல் தொடர் தொடக்கத்தில் இருந்து சிஎஸ்கேவில் நிறைய பிரச்சனைகள் நிலவி வருகிறது. முதலில் முக்கியமான வீரர்கள் சிலருக்கு கொரோனா வந்து சிஎஸ்கே பயிற்சி பாதிக்கப்பட்டது.

அதன்பின் சிஎஸ்கேவில் இருந்து ரெய்னா மற்றும் ஹர்பஜன் இருவரும் வெளியேறினார்கள். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் வெளியேறியது சிஎஸ்கே அணியை பெரிய அளவில் பாதித்தது.

ரெய்னா ஏன்?

ரெய்னா ஏன்?

சரியாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் ரெய்னா வெளியேறினார். கொள்ளையர்கள் மூலம் ரெய்னாவின் உறவினர்கள் கொல்லப்பட்டது இதற்கு முக்கியமான காரணமாக கூறப்பட்டது. ரெய்னாவின் நெருக்கமான உறவினர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரெய்னா அவசரமாக இந்தியா திரும்பினார்.

ஹர்பஜன்

ஹர்பஜன்

அதேபோல் சிஎஸ்கே நிர்வாகத்துடன் இவருக்கு மோதல் என்றும், அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் உடன் ரெய்னாவிற்கு கருத்து வேறுபாடு என்றும் தகவல்கள் வந்தது. இன்னொரு பக்கம் ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்பஜனும் வெளியேறினார். குடும்ப காரணங்கள் காரணமாக திடீர் என்று ஹர்பஜன் அணியில் இருந்து வெளியேறினார்.

மோசம்

மோசம்

இவர்கள் இருவரும் வெளியேறிய காரணத்தால் சிஎஸ்கே அணி கடுமையாக திணறியது. ஒன் டவுன் வீரர் இல்லாத காரணத்தாலும், சரியான ஸ்பின் பவுலிங் ஆப்ஷன் இல்லாத காரணத்தாலும் சிஎஸ்கே கடுமையாக திணறியது. இன்னும் ரெய்னாவின் இடத்தை சிஎஸ்கேவில் நிரப்ப சரியான வீரர் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இந்த நிலையில் ரெய்னா சிஎஸ்கே அணிக்கு இந்த வருடம் திரும்ப வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துவிட்டது. அவரின் முடிவை மதிக்கிறோம். அவர் இந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக விளையாட வாய்ப்பு இல்லை என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிரடியாக அறிவித்து.

டெர்மினேட்

டெர்மினேட்

இந்த நிலையில் தற்போது மொத்தமாக சிஎஸ்கேவில் இருந்து ரெய்னா, ஹர்பஜன் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதாவது இவர்கள் இருவரும் சிஎஸ்கேவுடன் செய்து இருக்கும் ஒப்பந்தத்தை "டெர்மினேட்" செய்து , மொத்தமாக அவர்களை நீக்க சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. ஏற்கனவே இவர்கள் பெயர் சிஎஸ்கேவின் வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு உள்ளது

வாய்ப்பு உள்ளது

இவர்கள் இருவரும் சிஎஸ்கேவில் இருந்து டெர்மினேட் செய்யப்பட்டால்..இனி பெரும்பாலும் அவர்கள் சிஎஸ்கே திரும்ப வாய்ப்பே இல்லை. மாறாக இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் இவர்கள் வேறு ஐபிஎல் அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது. வேறு ஐபிஎல் அணிகள் இவரை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Friday, October 2, 2020, 10:42 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+