Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நிறைய பேர் இருக்காங்க.. அவர்கிட்ட சொல்லிடுங்க.. தோனி போட்ட ஸ்கெட்ச்.. வசமாக சிக்கிய "அந்த" வீரர்!

துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிராக நடக்க உள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர் ஒருவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் இன்று மிக முக்கியமான போட்டி நடக்க உள்ளது. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் கொல்கத்தா அணிக்கும், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையில் இன்று மோதல் நடக்க உள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இன்று சிஎஸ்கே நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது. இன்னொரு பக்கம் கொல்கத்தா அணி 4 போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால், இன்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தோனி

தோனி

சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் இப்போதுதான் பார்மிற்கு திரும்பி உள்ளது. 4 போட்டிகளில் மோசமாக சொதப்பிய வாட்சன் இப்போதுதான் பேட்டிங் பார்மிற்கு திரும்பி உள்ளார். டு பிளசிஸ், ராயுடு ஏற்கனவே பார்மில் இருக்கிறார்கள். இரண்டு போட்டிகளாக அணியில் ஆடி வரும் பிராவோ, சர்த்துல் தாக்கூர் ஆகிய இருவரும் அணியில் நன்றாக ஆடி வருகிறார்கள்.

ஜடேஜா

ஜடேஜா

அதேபோல் சிஎஸ்கே கேப்டன் தோனியும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பார்மிற்கு வந்தார். இன்னொரு பக்கம் ஜடேஜாவும் அந்த போட்டியில் அரை சதம் அடித்து பார்மிற்கு வந்தார். பஞ்சாப் போட்டியில் ஜடேஜாவின் பவுலிங்கும் மிகவும் சிறப்பாக இருந்தது. சிஎஸ்கே அணியில் கிட்டத்தட்ட எல்லா வீரர்களும் தற்போது பார்மிற்கு திரும்பி விட்டனர்.

ஒரு வீரர்

ஒரு வீரர்

சிஎஸ்கே அணியில் தற்போது ஒரே ஒரு வீரர் மட்டும் முழு பார்மிற்கு திரும்பவில்லை. அவர்தான் கேதார் ஜாதவ். கடந்த 4 போட்டிகளாக இந்த சீசனில் அவர் சரியாக ஆடவில்லை. ஐபிஎல் போட்டிகளில் கடந்த 20 போட்டிகளாக இவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை. ஆனால் இவருக்கு கேப்டன் தோனி தொடர்ந்து அணியில் வாய்ப்பு வழங்கி வருகிறார். இவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

கட்டாயம்

கட்டாயம்

இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கேதார் ஜாதவ் உள்ளார். இன்று கேதார் ஜாதவ் பேட்டிங் இறங்கினால் அவர் கண்டிப்பாக தன்னை நிரூபித்து ஆக வேண்டும். இல்லையென்றால் இவருக்கு பதில் வேறு வீரர்களை தோனி களமிறக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அணிக்கு உள்ளேயே சில ஆல்ரவுண்டர்கள் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள்.

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்கள்

ஜெகதீசன் போன்ற வீரர்கள் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். இதனால் கேதார் ஜாதவ் உடனே பார்மிற்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் அவர் மாற்றுப்படுவார் என்று, அணி நிர்வாகம் சார்பாக அவருக்கு வார்னிங் பறந்து உள்ளது. தோனியும் கேதார் ஜாதவை மாற்றும் நோக்கத்தில்தான் இருக்கிறார். இன்றைய போட்டிதான் அவரின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, October 7, 2020, 21:02 [IST]
Other articles published on Oct 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+