
எப்படி
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் வெளியேறியது சிஎஸ்கே அணியை பெரிய அளவில் பாதித்தது. சிஎஸ்கேவில் இவர்கள் வெளியேறிய காரணத்தால் இப்போதும் அணி நிர்வாகம் கஷ்டப்பட்டு வருகிறது. சரியான டீம் காம்பினேஷன் இல்லாமல் அணி நிர்வாகம் கடுமையாக கஷ்டப்பட்டு வருகிறது.

கிண்டல்
ரெய்னா அணியில் இருந்து விலகியதற்கு நிறைய காரணம் சொல்லப்பட்டது. அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் சண்டை என்றெல்லாம் கூட காரணங்கள் சொல்லப்பட்டது. அதேபோல் ஹர்பஜனுக்கும் தோனிக்கும் சண்டை என்றும் கூறப்பட்டது. ஹர்பஜன் கூட தோனியின் வயதை இர்பான் பதான் கிண்டல் செய்ததை ஆமோதித்து டிவிட் செய்து இருந்தார்.

நிலைமை என்ன
இதுமட்டுமின்றி இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி வரிசையாக இந்த தொடரில் தோல்விகளை தழுவி வருகிறது. முதலில் மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி அடைந்தது. அதன்பின் வரிசையாக டெல்லி, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகளிடம் தோல்வி அடைந்தது. பஞ்சாப்பிடம் வெற்றிபெற்ற சிஎஸ்கே மீண்டும் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது.

சிக்கல்
இந்த தொடர் தோல்வி காரணமாக தற்போது சிஎஸ்கே கடுமையான சிக்கலில் உள்ளது. அணிக்குள்ளும் இதனால் பிரச்சனை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கருதப்படும் இளம் வீரர் லுங்கி நிகிடி சர்ச்சைக்குரிய சில டிவிட்களை செய்துள்ளார். அவரின் இரண்டு டிவிட்கள்தான் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல் டிவிட்
அவர் தனது முதல் டிவிட் ஒன்றில்.. எனக்கு கெட்டது நடக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று குதர்க்கமாக டிவிட் செய்து இருந்தார். அதேபோல் இன்னொரு டிவிட்டில் நமக்கு இருப்பது குடும்பம் மட்டும்தான் என்ற போது அந்த குடும்பத்தை பற்றி எப்படி பேசாமல் இருப்பது என்று கேட்டு இருக்கிறார். இந்த இரண்டு டிவிட்டிலும் லுங்கி நிகிடி சிஎஸ்கேவை குறிப்பிடவில்லை.

ஆனால் என்ன
ஆனால் இதில் இருக்கும் பின்னூட்டங்களில் பலர், உங்களுக்கு சிஎஸ்கேவில் சரியான வாய்ப்பு கிடைப்பது இல்லை. உங்களை இன்னும் நன்றாக நடத்த வேண்டும். உங்களுக்கு இந்த ஐபிஎல் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்று பின்னூட்டங்களை இட்டனர். சிஎஸ்கே அணியில் உங்கள் திறமைகளை சரியாக பயன்படுத்தவில்லை என்று பின்னூட்டம் இட்டனர்.

பதில்
இந்த பின்னூட்டங்கள் பலவற்றிற்கு லுங்கி நிகிடி லைக் இட்டுள்ளார். அதாவது சிஎஸ்கே லுங்கியை புறக்கணிக்கிறது என்று செய்யப்பட்ட கமெண்ட்களை அவர் லைக் செய்துள்ளார். இதனால் அவர் சிஎஸ்கேவைதான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று பலரும் கூற தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக சிஎஸ்கேவில் தற்போது என்ன நடக்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications