Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குளுக்கோஸ் குடிச்சிட்டு வாங்க.. சிஎஸ்கேவை ஒரே வார்த்தையில் காலி செய்த சேவாக்.. விரக்தியில் தோனி!

துபாய்: நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் வீரர்கள் மிக மோசமாக சொதப்பியது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கிண்டல் செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் இருந்தே விமர்சனங்களை சந்திக்க தொடங்கி உள்ளது. எப்போதும் அதிரடியாக களமிறங்கி, எதிரணியை வீழ்த்தும் சிஎஸ்கே இந்த முறை தொடக்கத்தில் இருந்தே திணற தொடங்கி உள்ளது.

அதிலும் டெல்லி, ராஜஸ்தான் போன்ற சிறிய சிறிய அணிகளிடம் எல்லாம் சென்னை மோசமான தோல்வியை தழுவி உள்ளது .

மிக மோசம்

மிக மோசம்

நேற்று நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியிலும் சரி, இதற்கு முன் சென்னை அணி ஆடிய போட்டியிலும் சரி சென்னையின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. முக்கியமாக ஓப்பனிங் வீரர்கள் 5-6 ஓவர்களை குடித்துவிட்டு ரன் எதுவும் எடுப்பதில்லை என்று புகார் உள்ளது. இவர்களால் கடைசியில் இறங்கும் வீரர்களுக்கு பிரஷர் அதிகம் உள்ளது. அதனால் கடைசியில் இறங்கும் வீரர்களும் மோசமாக சொதப்புகிறார்கள்.

தோனி மோசம்

தோனி மோசம்

சென்னையில் தோனி, ஜடேஜா போன்ற வீரர்கள் டி20 ஆடுவதற்கு பதில் டெஸ்ட் போட்டி ஆடுகிறார்கள். வெறும் சிங்கிள் அடித்து ஓடுகிறார்கள். சிஎஸ்கே வீரர்களிடம் பழைய பார்ம் இல்லை. அணியில் நிறைய வயதான வீரர்கள் உள்ளனர். இதனால் அணியிடம் அந்த துடிப்பு மிஸ்ஸாகிறது என்று நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.

தோனி பேட்டிங்

தோனி பேட்டிங்

அதிலும் சென்னை அணியின் கேப்டன் தோனி மீதும் நிறைய குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இவர் பொறுப்புடன் ஆடுவது இல்லை. அதிரடியாக ஆட வேண்டிய நேரத்தில் டொக் வைக்கிறார். முன்பு போல சிக்ஸ், பவுண்டரி அடிப்பது இல்லை. அதேபோல் பினிஷர் தோனியிடம் அந்த பினிஷிங் டச் இப்போதெல்லாம் இருப்பது இல்லை, என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

விரக்தியில் உள்ளார்

விரக்தியில் உள்ளார்

இந்த தொடர் புகார்கள் காரணமாக தோனி கடும் விரக்தியில் இருப்பதாகவும், அணியை எப்படியாவது வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முயன்று வருவதாகவும் கூறுகிறார்கள். இந்த நிலையில் சிஎஸ்கே வீரர்களின் ஆட்டத்தை முன்னாள் வீரர் சேவாக் கிண்டல் செய்துள்ளார். சிஎஸ்கேவின் பேட்டிங் சரியாக இல்லை. அவர்கள் அதிரடியாக ஆடுவது இல்லை. அவர்கள் இனிமேல் மைதானத்திற்கு பேட்டிங் செய்ய வருவதற்கு முன் கொஞ்சம் குளுக்கோஸ் குடித்துவிட்டு வர வேண்டும்., என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார்.

கிண்டல்

கிண்டல்

அதோடு நேற்று தோனி மிக மோசமாக பேட்டிங் செய்தார். அவரின் பேட்டிங்கில் நிறைய தவறு இருந்தது. அவரின் பேட்டிங் ஸ்டைல் மாறிவிட்டது. அதிகமாக தோனி சொதப்புகிறார். சிஎஸ்கேவை வெல்ல வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் கொஞ்சம் கூட விளையாடவில்லை, என்று இரண்டு நாட்கள் முன் சேவாக் குற்றஞ்சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 26, 2020, 17:41 [IST]
Other articles published on Sep 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+