அவரை பற்றி பேச கூடாது.. ரெய்னாவிற்கு எதிராக கண்டிஷன் போட்ட சிஎஸ்கே.. தோனிக்கு வைக்கப்பட்ட செக்?
சென்னை: ரெய்னா பற்றி பேசவே கூடாது என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது வீரர்களுக்கு கட்டளை இட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
2020 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே சிஎஸ்கே அணியில் நிறைய குழப்பங்கள் சர்ச்சைகள் நடந்து வருகிறது. சிஎஸ்கே அணியில் இருந்து ரெய்னா விலகியதுதான் இந்த சர்ச்சைகளின் தொடக்கம்.
சொந்த காரணங்கள், கொள்ளையர்கள் மூலம் உறவினர்கள் கொல்லப்பட்டது, சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் மோதல் என்று பல விஷயங்கள் ரெய்னாவின் இந்த முடிவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் என்ன
ஆனால் தற்போது பிரச்சனைகள் முடிந்து உள்ளதால், ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்ப முயன்று வருகிறார். மீண்டும் ஐபிஎல் தொடரில் இந்த வருடமே கலந்து கொள்ள அவர் திட்டமிட்டு வந்துள்ளார். இது தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகத்திடமும் அவர் பேசியுள்ளார்.

ஏற்கவில்லை
ஆனால் ரெய்னா அணிக்கு திரும்ப சிஎஸ்கே நிர்வாகம் சம்மதிக்கவில்லை. ரெய்னா அணிக்கு வர கூடாது. அவர் இல்லாமலே தொடர் நடக்கும் . அவர் அணியில் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இந்த தொடரில் அவரை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று சிஎஸ்கே ரெய்னாவிடம் வெளிப்படையாக அறிவித்துவிட்டது என்று கூறுகிறார்கள்.

என்ன சொன்னார்
நேற்று ரெய்னா அணிக்கு திரும்ப போகிறார் என்று வதந்திகள் பரவியது. நேற்று முழுக்க இது தொடர்பாக இணையத்தில் நிறைய செய்திகள் வந்தது. இப்படி செய்திகள் வெளியான உடன் சிஎஸ்கே நிர்வாகம் அதை அதிரடியாக மறுத்துவிட்டது. இந்த சீசனில் ரெய்னா அணிக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்று சிஎஸ்கே கூறிவிட்டது.

மறுப்பு
இந்த நிலையில்தான் சிஎஸ்கே வீரர்கள் யாரும் ரெய்னா குறித்து பேச கூடாது என்று கட்டளை போடப்பட்டுள்ளது என்கிறார்கள். பிரஸ் மீட், தனியார் நிகழ்ச்சிகள் எதிலும் ரெய்னா வெளியேறியது குறித்து பேச கூடாது. சமுக வலைத்தளங்களிலும் போஸ்ட் செய்ய கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது .

தோனி பேசவில்லை
எல்லா வீரர்களும் என்றால் தோனிக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்கிறார்கள். போட்டிக்கு பின் நடக்கும் பேட்டி எதிலும் ரெய்னா பெயரை குறிப்பிட கூடாது என்று தோனிக்கு கட்டளை பறந்து உள்ளது என்கிறார்கள். இதனால்தான் தோனியும் ரெய்னா குறித்து பேசவில்லை என்று கூறப்படுகிறது.

சந்தேகம்
இதன்பின்தான் சிஎஸ்கேவிற்கும் ரெய்னாவிற்கும் இடையே இணைக்க முடியாத அளவிற்கு பிளவு ஏற்பட்டுள்ளது. ரெய்னா அடுத்த சீசனில் வேறு ஐபிஎல் அணிக்கு விளையாட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications