
நேற்று சிஎஸ்கே
நேற்று நடந்த போட்டியில் முதல் பவர் பிளேவில் பஞ்சாப் கொஞ்சம் திணறியது. மயங்க் அகர்வால் விக்கெட் விழுந்த காரணத்தால் பஞ்சாப் நிதானமாக ஆடியது. பஞ்சாப் வீரர்கள் மிகவும் மெதுவாகவே ஆடினார்கள்.தேவையான நேரங்களில் மட்டும் சிஎஸ்கே வீரர்களின் பந்துகளில் கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் பவுண்டரி அடித்தனர்.

ஆனால் என்ன
19 பந்துகள் பிடித்த அகர்வால் 3 பவுண்டரி மட்டுமே அடித்தார். 26 ரன்கள் அடித்து அவுட்டான இவர் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. அதன்பிறகு கே. எல் ராகுல் கொஞ்சம் கொஞ்சமாக அதிரடி காட்ட தொடங்கினார். 12வது ஓவருக்கு பின் கே. எல் ராகுல் வேகம் எடுக்க தொடங்கினார். இன்னொரு பக்கம் பூரானும் நிலைத்து ஆட தொடங்கினார்.இதனால் பஞ்சாப் எப்படியும் 200 ரன்களை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மாறியது
வரிசையாக சாவ்லா, ஜடேஜா ஓவர்களில் கே. எல் ராகுல் சிக்ஸ் அடித்து வந்தார். இதனால் அவர் இன்னொரு செஞ்சுரி அடிப்பாரோ என்று கேள்வி எழுந்தது. ஆனால் சர்த்துல் தாக்கூர் போட்ட 18வது ஓவரின் முதல் இரண்டு பந்துகள் மொத்தமாக ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. சர்த்துல் தாக்கூர் போட்ட முதல் பந்திலேயே பூரான் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

சரியான பால்
மிக சரியாக சர்த்துல் தாக்கூர் போட்ட ஷார்ட் ஸ்லோ பாலை பூரான் பறக்கவிட்டார். ஆனால் பந்து மெதுவாக வந்ததால் சிக்ஸ் செல்லாமல் டீப் திசையில் இருந்த ஜடேஜாவிடம் தஞ்சம் புகுந்தது. அதற்கு அடுத்த பந்திலேயே கே. எல் ராகுல் விக்கெட்டையும் சர்த்துல் தாக்கூர் எடுத்தார். வைட் பால் போல, ஆப் திசையில் ஸ்லோ பால் போட்டார். இதை கணிக்க முடியாத கே. எல் ராகுல் அவுட்டானார்.

அவுட் ஆனார்
தோனி பாய்ந்து போய் கேட்ச் பிடிக்க பஞ்சாப்பின் ஒரே நம்பிக்கையான ராகுலும் அவுட்டானார். அதன்பின் வந்த
சர்ப்ராஸ், மேக்ஸ்வெல் இருவரும் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்கள். இதனால் மொத்தமாக பஞ்சாப் டெத் ஓவர்களில் ரன் எடுக்க முடியாமல் வெறும் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒருவேளை சர்த்துல் தாக்கூர் அந்த ஓவரில் இரண்டு விக்கெட் எடுக்கவில்லை என்றால்.. பஞ்சாப் 190+ ஸ்கோர் எடுத்து இருக்கும்.

ஸ்கோர் எத்தனை
இவரின் அந்த ஓவர்தான் மொத்தமாக போட்டியை மாற்றியது. வாட்சன், டு பிளசிஸ் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தாக்கூரும் நேற்று அமைதியான சென்னையின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் இவர் சிறப்பாக பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications