Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த ஒரு ஆட்டம் போதும்.. சிஎஸ்கேவின் எதிர்காலத்தை ஒரே நாளில் மாற்றிய இளம் வீரர்.. உற்சாகத்தில் தோனி

துபாய்: சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சாம் கரன் மீது தோனி மிகப்பெரிய அளவில் நம்பிக்கை வைத்து இருக்கிறார். நேற்று இவருடைய ஆட்டத்தை பார்த்து தோனி மிகுந்த உற்சாகத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

Recommended Video

SRH-க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் CSKவுக்கு சாதமாக போட்டியை மாற்றிய நபர்

2018ல் சிஎஸ்கே அணி அனுபவம் மிகுந்த வீரர்களாக பார்த்து அணியில் எடுத்தது. வயதான வீரர்கள், ஓய்வு பெற்ற வீரர்களை மட்டுமே சிஎஸ்கே அணியில் எடுத்தது. சிஎஸ்கேவின் இந்த முடிவு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.

ஆனால், அனுபவம் மிகுந்த வீரர்களை வைத்தே நாங்கள் விளையாடுவோம், கப் அடிப்பதே எங்களுக்கு முக்கியம், இளைஞர்களை அடையாளம் காட்ட ரஞ்சி கோப்பை போட்டிகள் போன்ற தொடர்கள் உள்ளது என்று சிஎஸ்கே விளக்கம் அளித்து இருந்தது.

என்ன சந்தேகம்

என்ன சந்தேகம்

அந்த வருடம் சிஎஸ்கே கோப்பை அடித்தது. ஆனால் 2018ல் எடுக்கப்பட்ட பல வீரர்கள் தற்போது மேலும் வயதாகிவிட்டனர். அவர்கள் எல்லோரும் மேலும் பார்ம் அவுட் ஆகி வருகிறார்கள். வாட்சன் போன்ற வீரர்களின் பீல்டிங்கில் துல்லியம் தவறி வருகிறது. ஏன் தோனியிடமே பெரிய அளவில் இப்போதெல்லாம் பழைய வேகம் இல்லை.

பெரிய கேள்வி

பெரிய கேள்வி

இதனால் சிஎஸ்கே அணி எதிர்காலத்தில் என்ன செய்யும். சிஎஸ்கேவில் ஸ்டார் வீரர்கள் எல்லாம் மோசமாக அடி வாங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிஎஸ்கே என்ன செய்யும் என்று கேள்விகள் எழுந்தது. சிஎஸ்கேவின் ரசிகர்களே அணியின் எதிர்காலம் மீது நம்பிக்கை இன்றி காணப்பட்டனர். ஆனால் சிஎஸ்கேவின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு.. சின்ன நம்பிக்கையாக சாம் கரன் உருவெடுத்து உள்ளார்.

 சாம் கரன் எப்படி

சாம் கரன் எப்படி

சிஎஸ்கே அணியில் வரும் சீசன்களில் மிக முக்கியமான வீரராக சாம் கரன் இருக்க போகிறார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்து உள்ளனர். ஆல் ரவுண்டரான இவர் லெப்ட் ஹேண்ட் பேட்டிங் செய்கிறார். மீடியம் பர்ஸ்ட் பவுலிங்கும் செய்கிறார். ஹிட்டரான இவர் ஒரு காலத்தில் சுனில் நரேன் அதிரடியாக ஆடியது போல இப்போது ஆடி வருகிறார்.

ஓப்பனிங் இறக்குகிறார்

ஓப்பனிங் இறக்குகிறார்

வலை பயிற்சியில் இவரின் பேட்டிங்கை பார்த்து ஈர்க்கப்பட்ட தோனி நேற்று இவரை ஓப்பனிங் இறக்கிவிட்டார். நேற்று ஓப்பனிங் இறங்கிய சாம் கரன் அதிரடியாக ஆடி தனது திறமையை நிரூபித்தார். 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர் 3 பவுண்டரி அடக்கம். முதல் பவர் பிளேவில் தேவையான ரன்களை அடித்துவிட்டு அவுட்டானார். தன்னை தோனி ஏன் டாப் ஆர்டரில் இறக்கினாரோ அதற்கான நியாயத்தை நேற்று சாம் கரன் செய்தார்.

இனி எதிர்காலம் எப்படி

இனி எதிர்காலம் எப்படி

அதேபோல் நேற்று முக்கியமான நேரத்தில் வார்னர் விக்கெட்டையும் இவர்தான் வீழ்த்தினார். பவுலிங், பீல்டிங் என அனைத்தையும் இவர் துல்லியமாக செய்கிறார். இவர் சிஎஸ்கேவின் எதிர்கால திட்டங்களை எல்லாம் மாற்றிவிட்டார் என்று கூறுகிறார்கள். எதிர்காலத்தில் புதிய ஒப்பனர்களை ஏலம் எடுக்க நினைத்த சிஎஸ்கே, பெரும்பாலும் அடுத்த சீசன்களில் சாம் கரனை வைத்தே போட்டியை தொடங்கும் என்று கூறுகிறார்கள்.

முக்கியம்

முக்கியம்

எதிர்காலத்தில் இவர் மிக முக்கியமான வீரராக உருவெடுப்பார் என்று கூறுகிறார்கள். சாம் கரனின் ஆல் ரவுண்டர் ஆட்டத்தை பார்த்து தோனியே வியந்து போய் உள்ளார். நேற்று போட்டிக்கு பின் பேசிய தோனி சாம் கரனை புகழ்ந்து தள்ளினார். தோனி தனது பேச்சில் , சாம் கரன் ஓப்பனிங் இறங்குவதால் வலது - இடது காம்பினேஷன் கிடைக்கிறது.

சிறப்பான வீரர்

சிறப்பான வீரர்

சாம் கரன் முழுமையான கிரிக்கெட் வீரராக இருக்கிறார். நன்றாக பவுலிங் செய்கிறார், பேட்டிங் பீல்டிங் செய்கிறார். சிஎஸ்கேவிற்கு தேவையான 20-45 ரன்களை தேவையான நேரத்தில் வேகமாக அடித்து தருகிறார். தேவையான நேரத்தில் விக்கெட் எடுக்கிறார்.ஒரு இடதுகை பேட்ஸ்மேன் அணியில் இருப்பது எப்போதும் நல்ல விஷயம். அவர் அணிக்கு வலிமை சேர்க்கிறார் என்று தோனி பேட்டி அளித்துள்ளார்.

Story first published: Wednesday, October 14, 2020, 18:53 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+