
சிஎஸ்கே வெற்றி
ஹைதராபாத்திற்கு எதிராக நேற்று முதல்நாள் சிஎஸ்கே வெற்றிபெற்றது. முதலில் ஆடிய சிஎஸ்கே 167 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய ஹைதராபாத் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று.. இந்த தொடரில் உயிர்ப்புடன் உள்ளது.

தோனி என்ன சொன்னார்
இந்த போட்டியின் வெற்றிக்கு பின் தோனி முக்கியமான விஷயம் ஒன்றை குறிப்பிட்டார். சிஎஸ்கே ஆட்டம் கிட்டத்தட்ட முழுமையான ஆட்டம் போலவே இருந்தது. ஆனால் சில இடங்களில் உள்ள குறைகளை நாங்கள் சரி செய்ய வேண்டும். சில விஷயங்களை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆம் தோனி சொல்வது போல சிஎஸ்கே வெற்றிபெற்று இருந்தாலும் முக்கியமான விஷயம் ஒன்றை மாற்ற வேண்டும்.

என்ன மாற்றம்
நேற்று முதல்நாள் போட்டியில் சிஎஸ்கேவின் ராயுடு, வாட்சன் இருவரும் அதிரடியாக ஆடினார்கள். வாட்சன் 42 ரன்களும், ராயுடு 41 ரன்களும் எடுத்து இருந்தனர். மேலோட்டமாக பார்த்தால் இவர்கள் அதிரடியாக ஆடியது போலத்தான் இருக்கும். ஆனால் கூர்ந்து கவனித்தால் இவர்கள் இருவருமே பெரிய அளவில் அதிரடியாக ஆடவில்லை என்பது புலனாகும்.

ஆடவில்லை
வாட்சன் 38 பந்துகள் பிடித்து 42 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் ராயுடு 34 பந்துகள் பிடித்து 41 ரன்கள் எடுத்தார். இரண்டு பேருமே கிட்டத்தட்ட 110தான் ஸ்டிரைக் ரேட் வைத்து இருக்கிறார்கள்.இவர்கள் இருவருமே மிடில் ஆர்டரில் இறங்கி அதிக ஓவர்கள் பேட்டிங் செய்து உள்ளனர். ஆனாலும் பெரிய அளவில் வேகமாக ஆடவில்லை. இருவரும் 40 ரன்கள் அடித்து இருந்தாலும் ஸ்டிரைக் ரேட் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

சிக்கல்
அந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் பேட்டிங் ஆர்டர் சரியில்லை என்பதால் தப்பித்தோம். ஆனால் இதேபோல் மும்பை, டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே ஆடி இருந்தால் அவ்வளவுதான் கதை குளோஸ். ஆம் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டான காரணத்தால் சிஎஸ்கேவால் 167 ஸ்கோரை டிபன்ட் செய்ய முடிந்தது. ஆனால் மும்பை, டெல்லி ஆடி இருந்தால் அந்த அணிகள் எளிதாக சேஸ் செய்திருக்கும்.

சேசிங்
சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் வந்து ஜடேஜா, தோனி அதிரடி காட்டாமல் இருந்தால் சிஎஸ்கே இன்னும் மோசமாக இலக்கை கூட எடுத்திருக்கும். சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் இப்போதும் மோசமாக இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிய தொடங்கி உள்ளது.

இலக்கு எப்படி
180+ஸ்கோர் இலக்கு எல்லாம் சிஎஸ்கேவிற்கு வைக்கப்பட்டால் அந்த அணி வெற்றிபெறுவது சந்தேகம்தான். சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் வீரர்கள் இப்போதும் டெஸ்ட் இன்னிங்ஸ்தான் ஆடி வருகிறார்கள். பிராவோவும் இன்னும் பார்மிற்கு திரும்பாத நிலையில் சிஎஸ்கே மிடில் ஆர்டரில் என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த போட்டியில் ஆடியது போல அடுத்த போட்டியிலும் வாட்சன், ராயுடு மெதுவாக ஆடினால் ஆட்டமே கைவிட்டு போனாலும் கூட போகும்!


Click it and Unblock the Notifications