எவ்வளவு கோடி ஆனாலும் பரவாயில்லை.. அவரை அணியில் எடுங்கள்.. சிஎஸ்கேவிற்கு பறக்கும் மெசேஜ்.. பின்னணி

துபாய்: தமிழக வீரர் நடராஜனை சிஎஸ்கே அணி நிர்வாகம் எப்படியாவது அணியில் எடுக்க வேண்டும், அடுத்த சீசனில் இவரை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

Natarjanஐ கொண்டாடும் SRH! குறி வைத்த BCCI | OneIndia Tamil

தமிழக வீரர் நடராஜன் இந்த சீசனில் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஹைதராபாத் அணிக்காக ஆடி வரும் நடராஜன் இந்த சீசனில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி உள்ளார்.

63 யார்க்கர் பந்துகளை இந்த சீசன் முழுக்க வீசி..இந்த தொடரில் புதிய சாதனையை நடராஜன் செய்துள்ளார். இதனால் பலரின் பார்வை இவர் பக்கம் திரும்பி உள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

இவரின் சிறப்பான பவுலிங் காரணமாகஇப்போது இந்திய அணியிலும் இவர் தேர்வாகி உள்ளார். ஆடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு பதிலாக நெட் பயிற்சியில் பவுலிங் செய்ய இவர் தேர்வாகி உள்ளார். விரைவில் இவர் இந்தியாவின் ஆடும் அணிக்கும் தேர்வாக வாய்ப்புள்ளது.

ஏலம் எடுக்க வேண்டும்

ஏலம் எடுக்க வேண்டும்

இந்த நிலையில் இவரை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத் அணியில் ஆடும் நடராஜனை அந்த அணி எப்படியும் ரீ டெயின் செய்ய முடியாது. வார்னர், ரஷீத், கேன் வில்லியம்சன், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா போன்றவர்களை அந்த அணி ரீ டெயின் செய்யும்.

இதனால்

இதனால்

நடராஜன் ஏலம் விடப்பட வாய்ப்புள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இந்த ஏலம் நடக்க உள்ளது. இதில் நடராஜனை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு செலவு ஆனாலும், அவரை ஏலம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணியில் நல்ல டெத் பவுலர் இல்லை. இதனால் அணியில் எப்படியாவது நடராஜனை எடுத்தால்.. அது சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும், என்கிறார்கள்.

பயிற்சி

பயிற்சி

அதேபோல் தோனிக்கு கீழ் நடராஜனும் பயிற்சி பெற இது பெரிய அளவில் உதவியாக இருக்கும்.. நடராஜனின் எதிர்காலத்தில் இது பெரிய பங்கு வகிக்கும். இதனால் நடராஜனை அணியில் எடுக்க வேண்டும் என்று பலரும் சிஎஸ்கேவிற்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: CSK should look for T Natarajan in next season auction for death overs.
Story first published: Monday, November 9, 2020, 9:38 [IST]
Other articles published on Nov 9, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X