Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அதுக்கெல்லாம் டைம் இல்லை".. 6 நாட்களாக வியர்வை சிந்திய தோனி.. விமர்சனங்களை அடுத்து அதிரடி மூவ்!

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று சிஎஸ்கே மோத இருக்கும் நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனி கடுமையாக பேட்டிங் பயிற்சி செய்ததாக தகவல்கள் வருகிறது.

எனக்கு போதுமான பேட்டிங் பயிற்சி இல்லை. 14 நாட்கள் நான் தனிமைப்படுத்தப்பட்டேன். இதனால் சரியாக பேட்டிங் பயிற்சி செய்ய முடியவில்லை. அதனால்தான் நான் தற்போது 7வது இடத்தில் இறங்குகிறேன்.

விரைவில் நீங்கள் மாற்றத்தை காண்பீர்கள் என்று டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன் தோனி பேட்டி அளித்து இருந்தார். தன்னுடைய பேட்டிங் சொதப்புவதற்கான காரணத்தை அவர் வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார்.

பயிற்சி

பயிற்சி

சரியாக பயிற்சி இல்லை அதுதான் பேட்டிங் சரியாக செய்ய முடியாததற்கு காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். பயிற்சியாளர் பிளமிங்கும் தோனியின் இந்த கருத்தை வழி மொழிந்தது குறிப்பிடத்தக்கது. கம்பீர் , சேவாக் உள்ளிட்டோர் தோனியின் பேட்டிங் ஆர்டரையும், பேட்டிங்கையும் விமர்சனம் செய்ததை அடுத்து தோனி இப்படி பதில் அளித்து இருந்தார்.

கடுமை

கடுமை

கொரோனா லாக்டவுன் காரணமாகவும் இவரின் பயிற்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இவரின் பேட்டிங் கடந்த இரண்டு போட்டியில் மிக மோசமாக இருந்தது. டெஸ்ட் இன்னிங்ஸ் போல இவரின் பேட்டிங் இருந்தது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

பதிலடி

பதிலடி

தோனியின் பேட்டிங்கிற்கு எதிராக இப்படி கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் வகையில்தான் தோனி, ''பயிற்சி செய்ய நேரம் இல்லை'' என்று குறிப்பிட்டார். ஆனால் தோனியின் கருத்தே அவருக்கு எதிராக திரும்பியது. போதிய பயிற்சி இல்லாமல் ஏன் அவர் களத்திற்கு வருகிறார், பயிற்சி இல்லாமல் பேட்டிங் செய்து ஏன் அணியை தோல்வி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கேள்விகள் எழுந்தது.

வாய்ப்பு

வாய்ப்பு

பேட்டிங் பயிற்சி இல்லை. அதனால் பேட்டிங் செய்ய முடியவில்லை என்றால் ஏன் ஆட வருகிறார் என்றும் தோனிக்கு எதிராக சிலர் கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தனர். இந்த நிலையில் தனக்கு எதிராக வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்க தோனி தயார் ஆகிவிட்டார் என்று கூறுகிறார்கள். இனி வரும் போட்டிகளில் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று அவர் தீவிரமாக பயிற்சி எடுத்துள்ளார்.

6 நாட்கள்

6 நாட்கள்

கடந்த 6 நாட்கள் அவர் மிக கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளார். அதிக நேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஜிம்மில் நீண்ட நேரம் இருந்துள்ளார் என்கிறார்கள். அதோடு அதிரடி ஷாட்களை அடித்து பழகி உள்ளார். முக்கியமாக சரியான லென்தில் வரும் பந்துகளை எதிர்கொண்டு ஆடி உள்ளார். கடந்த 6 நாட்களும் இவர் பேட்டிங் பயிற்சி செய்தார். சரியாக ஓய்வு எடுக்கவில்லை. தன்னுடைய தவறுகளை சரி செய்ய முயன்றார் என்று அணியின் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

விமர்சனம் பெரிதில்லை

விமர்சனம் பெரிதில்லை

அவர் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவருக்கு தன்னுடைய பேட்டிங் சரியாக இருக்க வேண்டும் என்று தனிப்பட்ட வெறி உள்ளது. இதனால் அவர் பயிற்சி மேற்கொண்டார். எப்படியாவது சிஎஸ்கேவை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் தீவிர பேட்டிங் பயிற்சி செய்தார். விரைவில் அவர் பார்மிற்கு திரும்புவார் என்று கூறுகிறார்கள்.

Story first published: Friday, October 2, 2020, 18:39 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+