Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இருக்கிறவர்களை என்ன செய்வது? டிரான்ஸ்பருக்கு எதிராக குதித்த தோனி.. விடாப்பிடியாக துரத்தும் சிஎஸ்கே!

துபாய்: 2020 ஐபிஎல் சீசனில் புதிய வீரர்களை டிரான்ஸ்பர் மூலம் அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு உள்ளேயே இதற்கு எதிராக குரல்கள் எழ தொடங்கி உள்ளது.

2020 ஐபிஎல் தொடருக்கான டிரான்ஸ்பர் பணிகள் இன்று தொடங்குகிறது. எல்லா அணிகளும் 7 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் இன்றில் இருந்து டிரான்ஸ்பர் பணிகள் நடைபெறும்.

இந்த டிரான்ஸ்பர் மூலம் பிற அணியில் இருக்கும் வீரர்களை வேறு அணிகள் காசு கொடுத்து வாங்க முடியும். பிற அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களை இப்படி ஏலம் எடுக்க முடியும்.

சிஎஸ்கே எப்படி

சிஎஸ்கே எப்படி

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்குள் புதிய வீரர்களை கொண்டு வர அணி நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. இதனால் அணியில் இருக்கும் குறைபாடுகளை சரி செய்யலாம் என்று சிஎஸ்கே நிர்வாகம் நினைக்கிறது. இதற்காக சில வீரர்களையும் அந்த அணி மனதில் வைத்து உள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

முக்கியமாக மிடில் ஆர்டர் வீரர்கள், ஸ்பின் பவுலர்களை சிஎஸ்கே நிர்வாகம் மனதில் வைத்துள்ளது. இந்திய வீரர்கள் சிஎஸ்கேவில் குறைவாக இருக்கிறார்கள் என்பதால் அவர்களை குறி வைக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியலும் தயார் செய்யப்பட்டுவிட்டது என்று கூறுகிறார்கள்.

சிக்கல்

சிக்கல்

ஆனால் தோனி இதை விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். அதாவது டிரான்ஸ்பர் மூலம் புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வருவதை தோனி விரும்பவில்லை என்கிறார்கள். புதிய வீரர்கள் வந்தால் அணியில் அவர்கள் செட்டாவது கடினம். இது அணிக்குள் சமநிலையற்ற தன்மையை உண்டாக்கும் என்று தோனி கருதுகிறார்.

ஏற்கனவே சிலர்

ஏற்கனவே சிலர்

அதேபோல் அணிக்குள் ஏற்கனவே பலர் வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர். சான்டனர், ஹசல்வுட், லுங்கி நிகிடி, இம்ரான் தாஹிர் என்று பலர் வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கிறார்கள். இருக்கிறவர்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை.. இதில் கூடுதலாக எப்படி வீரர்களை கொண்டு வருவது என்று தோனி கேள்வி எழுப்பி உள்ளார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இது குறித்து பெங்களூர் போட்டிக்கு முன்பாகவே தோனி வெளிப்படையாக கருத்து தெரிவித்து இருந்தார். தோனி தனது பேச்சில், பொதுவாக ஒரு அணிக்குள் வேறு அணியை சேர்ந்த வீரர்கள் வர மாட்டார்கள். ஒரே அணியோடு இருப்பதைதான் பெரும்பாலான அணிகள் விரும்பும். வெளி ஆட்கள் வருவதை பெரும்பாலும் அணிகள் விரும்பாது. ஒரே அணியாக இருப்பதுதான் முக்கியமான விஷயம்., என்றுகுறிப்பிட்டுள்ளார்.

வெளி வீரர்கள்

வெளி வீரர்கள்

வெளியில் இருந்து வீரர்களை வருவதை விரும்பாமலோ தோனி இப்படி பேசி இருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் அணி இருக்கும் நிலைமையை பார்த்துவிட்டு கண்டிப்பாக புதிய வீரர்களை கொண்டு வர வேண்டும் என்று சிஎஸ்கே நினைக்கிறது. இதனால் அணி நிர்வாகத்திற்கும் - தோனிக்கும் இடையே வாங்குவாதம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள் .

Story first published: Wednesday, October 14, 2020, 13:55 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+