Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களுக்கு மட்டுமல்ல.. எல்லோருக்கும் இதே பிரச்சனைதான்.. தோனி சொன்ன அந்த விஷயம்.. குறி வைத்த பிசிசிஐ!

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் எல்லா அணிகளும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை ஒன்றை குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி இன்று பேட்டி அளித்தார்.

சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டி அபுதாபியில் நடக்கிறது. இதனால் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். சேசிங்கில் ராஜஸ்தானை மடக்க தோனி திட்டமிட்டு உள்ளார்.

தோனி

தோனி

2020 ஐபிஎல் தொடரில் எல்லா அணிகளும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை ஒன்றை குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி இன்று பேட்டி அளித்தார். தோனி தனது பேச்சில், சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்யும். போக போக இங்கு பிட்ச் ஸ்லோ ஆகும். அதனால் சேசிங் செய்வது கடினம். அதிக ரன் எடுக்க வேண்டும்.

பிராவோ

பிராவோ

இன்று அணியில் பிராவோ ஆட மாட்டார். அவர் இன்னும் சில போட்டிகளில் ஆட மாட்டார். காயம் காரணமாக அவர் அவதிப்பட்டு வருகிறார். காயம் என்பது சிஎஸ்கே அணிக்கு மட்டும் பிரச்சனை கிடையாது. இது எங்களுக்கு மட்டும் இருக்கும் பிரச்சனை கிடையாது.

நிறைய அணிகள்

நிறைய அணிகள்

நிறைய அணிகளில் இருக்கும் வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உள்ளது. கடந்த சில மாதங்களாக வீரர்கள் கிரிக்கெட் ஆடவில்லை. பல நாட்களாக கிரிக்கெட் ஆடாத காரணத்தால் களத்திற்கு வந்ததும் வீரர்களுக்கு காயம் ஏற்படுகிறது, என்று தோனி குறிப்பிட்டு உள்ளார்.

முக்கியம்

முக்கியம்

மிகவும் முக்கியமான விஷயத்தை இன்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார். இந்த ஐபிஎல் சீசனில் மிட்சல் மார்ஷ், பண்ட், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், அமித் மிஸ்ரா என்று பல முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக கிரிக்கெட் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமான வீரர்கள் பலரும் காயம் அடைந்துள்ளனர்.

Story first published: Monday, October 19, 2020, 20:28 [IST]
Other articles published on Oct 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+