Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதை மட்டும் கண்டுபிடித்துவிட்டோம்.. மிகப்பெரிய பிளான்.. சீக்ரெட்டை உடைத்த தோனி.. ரெடியான சிஎஸ்கே!

துபாய்: சிஎஸ்கே அணியில் செய்யப்பட போகும் மிகப்பெரிய மாற்றம் குறித்தும் கேப்டன் தோனி பேசி இருக்கிறார்.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆப் சென்ற ஒரே அணி என்ற பெருமையை சிஎஸ்கே இழந்து இருக்கிறது.

இதனால் சிஎஸ்கே அணியில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அணியில் இருக்கும் முக்கியமான வீரர்களை நீக்க வேண்டிய கட்டாயத்தில் தோனி இருக்கிறார்.

பேட்டி

பேட்டி

இது குறித்து தோனியே தற்போது பேட்டி அளித்துள்ளார். அதில், அணியில் இடம் பிடித்து இருக்கும் ரூத்துராஜ் தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவர் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்து உள்ளார். தொடரில் உறுதியாக இருப்பதும், அணிக்கு உதவி செய்வதும் மிக முக்கியம்.

பிளே ஆப்

பிளே ஆப்

நாங்கள் பிளே ஆப் செல்ல முடியாது. பிளே ஆப் செல்ல கூடிய சூழ்நிலையில் நாங்கள் இல்லை. ஆனால் அணியில் நிறைய மாற்றங்கள் நடந்து உள்ளது. அணிக்குள் யாரெல்லாம் நன்றாக ஆடுகிறார்கள் என்று தெரிந்துவிட்டது.

யாரெல்லாம் ஆடுவார்கள்

யாரெல்லாம் ஆடுவார்கள்

அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக யாரெல்லாம் ஆட முடியும் என்று தெரிந்துவிட்டது. வருகிற சீசன்களில் சிஎஸ்கேவில் ஆட தகுதியான வீரர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டோம், என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார். முதல் முறையாக அடுத்த சீசன் குறித்து தோனி இப்படி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

ஜடேஜா

ஜடேஜா

அதிலும் அடுத்த சீசனில் ஆடும் வீரர்கள் குறித்தும் பேசி உள்ளார். ஜடேஜா, ரூத்த்ராஜ், சாம் கரன் போன்ற வீரர்களை குறிப்பிட்டுதான் தோனி இப்படி பேசியுள்ளார் என்று கூறுகிறார்கள். இளம் வீரர்களைதான் அடுத்த வருடம் சிஎஸ்கே களமிறக்க போகிறது என்பதை தோனி வெளிப்படையாக அறிவித்துள்ளார் என்று கூறுகிறார்கள்.

ஓகே

ஓகே

தோனியின் முடிவிற்கு சிஎஸ்கேவும் ஓகே சொல்லிவிட்டது என்கிறார்கள். கேப்டனாக நீங்களே இருங்கள். ஒரு கேப்டனாக நீங்கள் எடுக்கும் முடிவை ஆதரிப்போம் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது என்கிறார்கள். இதனால் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்கிறார்கள்.

Story first published: Friday, October 30, 2020, 19:29 [IST]
Other articles published on Oct 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+