For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"மீட்டிங்கில் நிறைய நடந்தது".. ஆனால் வெளியே பேசமாட்டோம்.. ரகசியத்தை உடைத்த தோனி.. என்ன சொன்னார்?

துபாய்: பஞ்சாப்பிற்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்ற நிலையில் கேப்டன் தோனி அது குறித்து பேட்டி அளித்துள்ளார்.

நேற்று பஞ்சாப்பிற்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அபார வெற்றிபெற்றது. வரிசையாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த சிஎஸ்கே நேற்று மாஸ் வெற்றிபெற்று, நினைத்து பார்க்க முடியாத கம்பேக் கொடுத்தது.

மொத்தமாக ஆட்டத்தை நேற்று சிஎஸ்கே தொடக்கத்தில் இருந்து கட்டுப்படுத்தியது. நேற்று முதலில் ஆடிய பஞ்சாப் 4 விக்கெட்டிற்கு 178 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சிஎஸ்கே ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 181 ரன்கள் எடுத்து அதிரடி வெற்றி பெற்றது.

வெற்றி தோனி

வெற்றி தோனி

சிஎஸ்கே வெற்றிக்கு பின் தோனி மிகவும் மகிழ்ச்சியாக பேட்டி அளித்தார். அதில், நாங்கள் சின்ன சின்ன விஷயங்களை சரியாக செய்தோம். அதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம். இது போன்ற ஒரு தொடக்கத்தைதான் இன்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம். இங்குதான் அனுபவம் எங்களுக்கு கை கொடுத்தது.

ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. வாட்சன் வலைபயிற்சியில் மிகவும் சிறப்பாக ஆடினார் . அதனால் எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது. அதை மைதானத்தில் மீண்டும் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அவர் அதேபோல் செய்தார்.

பார்மிற்கு வந்தனர்

பார்மிற்கு வந்தனர்

பார்மிற்கு திரும்ப ஒரு நொடி போதும், ஒரு நாள் போதும். அதை அப்படியே பின்பற்றிக்கொண்டே சென்று விடலாம். அதேபோல் இன்னொரு பக்கம் டு பிளசிஸ் எங்களுக்கு நங்கூரம் போன்று நிலையாக இருந்தார். அவர் தன்னுடைய வித்தியாசமான ஷாட்கள் மூலம் எப்போதும் வீரர்களை குழப்ப கூடியவர். அவர்கள் இருவர் இடையிலும் நல்ல ஒற்றுமை உள்ளது.

அங்கீகரிக்க வேண்டும்

அங்கீகரிக்க வேண்டும்

வீரர்களை அங்கீகரிக்க வேண்டும். பிளமிங் விளையாடிய போது இது போன்ற அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை. எங்களுக்கு இடையில் இருக்கும் முக்கிய விஷயம் நாங்கள் அனைத்து முடிவையும் ஒன்றாக சேர்ந்து எடுப்போம். அணி தேர்வில் சில கருத்து வேறுபாடு வரும். மீட்டிங்கில் சில சமயம் விவாதங்கள் செய்வோம்.

வெளியே பேச மாட்டோம்

வெளியே பேச மாட்டோம்

சென்ற மீட்டிங்கில் நிறைய பேசினோம். ஆனால் அதை பற்றி வெளியே பேச மாட்டோம். வெளியே எந்த தகவலும் சொல்ல மாட்டோம். கேப்டன், பயிற்சியாளர் இடையே நல்ல ஒற்றுமை உள்ளது. இதனால் முடிவுகளை எளிதாக எடுக்கிறோம். நாங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அது எங்கள் அறைக்கு உள்ளே மட்டுமே இருக்கும். இன்று பவுலர்களும் மிக சிறப்பாக செயல்பட்டனர். எங்கள் திட்டத்தின்படி இன்று பவுலிங் செய்தோம்.

சரியான ஷாட்கள்

சரியான ஷாட்கள்

மிக சரியான ஷாட்களை தேர்வு செய்து ஆடினோம். அதிலும் வாட்சன், டு பிளசிஸ் இரண்டு பேரும் துல்லியமான ஷாட்டுகளை ஆடினார்கள். அவர்களின் ஆட்டத்தை பார்க்கவே விருந்தாக இருந்தது, என்று தோனி குறிப்பிட்டுள்ளார். தோனி தனது பழைய அணியை நம்பி அவர்களுக்கு சப்போர்ட் செய்ததே சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Monday, October 5, 2020, 8:47 [IST]
Other articles published on Oct 5, 2020
English summary
IPL 2020: CSK skipper Dhoni tells the reason for defeating Punjab yesterday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+