For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"இன்னும் 2 வாரம்".. பிராவோ குறித்து பிளமிங் கொடுத்த அப்டேட்.. மொத்தமாக முடியும் சிஎஸ்கே கதை.. பரபர!

துபாய்: சிஎஸ்கே ஆல் ரவுண்டர் பிராவோவிற்கு ஏற்பட்ட காயம் குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டிபன் பிளமிங் பேட்டி அளித்துள்ளார்.

நேற்று டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.நேற்று முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.

நன்றாக தொடக்கம் இருந்தாலும் சிஎஸ்கே கடைசியில் மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. அதன்பின் இறங்கிய டெல்லி 19.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

எப்படி?

எப்படி?

நேற்று சிஎஸ்கேவின் தோல்விக்கு கடைசி ஓவரை ஜடேஜா வீசியதும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. எப்போதும் சிஎஸ்கே அணிக்கு கடைசி ஓவரை பிராவோதான் வீசுவார். ஆனால் நேற்று காயம் காரணமாக இவர் பாதியில் வெளியேறினார். இதன் காரணமாக ஜடேஜா கடைசி ஓவரை வீசி, அதில் மூன்று சிக்ஸும் கொடுத்து டெல்லியை வெற்றிபெற வைத்தார் .

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில் பிராவோவிற்கு ஏற்பட்ட காயம் குறித்து தற்போது அணியின் பயிற்சியாளர் ஸ்டிபன் பிளமிங் பேட்டி அளித்துள்ளார். அதில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பிராவோ காயம் அடைந்தார். அதனால் அவரால் கடைசி ஓவரில் பந்து வீச முடியவில்லை. பொதுவாக சிஎஸ்கேவிற்கு பிராவோதான் டெத் ஓவர்களில் பந்து வீசுவார்.

சீசன்

சீசன்

இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்து போட்டிகள் செல்ல செல்ல எங்களுக்கு ஏதாவது சவால் வந்து கொண்டே இருக்கிறது. ஜடேஜாவை கடைசி ஓவரில் பவுலிங் செய்ய வைக்கும் திட்டம் இல்லை.ஆனால் பிராவோ சென்றதால் தோனி அவரை பவுலிங் செய்ய வைத்தார். எங்களுக்கு சாதகமான சூழ்நிலை நேற்று இருந்தது .

கடினம்

கடினம்

ஆனால் எங்கள் பிளான் நேற்று கை கொடுக்கவில்லை. நாங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். சில விஷயங்களை மாற்ற வேண்டும். பிராவோவிற்கு அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் எலும்பில் வலி ஏற்பட்டுள்ளது. இடது பக்கத்தில் இந்த வலி ஏற்பட்டுள்ளது. அங்கு அவருக்கு காயம் பட்டுள்ளது.

அதுதான் காரணம்

அதுதான் காரணம்

இதனால் அவரால் ஆட முடியவில்லை. அவர் நிலைமை சரியாக இல்லை. அதனால்தான் அவரால் களத்திற்கு வர முடியவில்லை. பிராவோ மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். களத்திற்கு வர முடியவில்லை, முக்கியமான நேரத்தில் ஆட முடியவில்லை என்ற வருத்தத்தில் பிராவோ இருக்கிறார்.

எப்படி இருக்கிறார்

எப்படி இருக்கிறார்

அவரின் உடல் தகுதியை சோதனை செய்து வருகிறோம். ஆனால் நீங்கள் இதை கணிக்க முடியும். அவருக்கு ஏற்பட்டு இருக்கும் காயம் காரணமாக கண்டிப்பாக இன்னும் சில நாட்கள் ஆட முடியாது . அல்லது இரண்டு வாரங்களாவது அவர் ஆட மாட்டார். அவர் போது திரும்பி வருவது கஷ்டம்தான் என்று பிளமிங் குறிப்பிட்டுள்ளார்.

கஷ்டம்

கஷ்டம்

பிளமிங் சொல்வதை பார்த்தால் குறைந்தது ஒரு வாரமாவது பிராவோ ஆட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. இதனால் மீதம் இருக்கும் 5 போட்டிகளில் பெரும்பாலான போட்டிகளில் பிராவோ ஆட வாய்ப்பு இல்லை. அதன்பின்பும் அவர் உடல் தகுதியை நிரூபித்து அணியில் சேர்வாரா என்பதே சந்தேகம்தான் என்கிறார்கள்.

Story first published: Sunday, October 18, 2020, 10:29 [IST]
Other articles published on Oct 18, 2020
English summary
IPL 2020: CSK skipper Fleming gives an update about Bravo.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+