Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹைதராபாத்தை வீழ்த்த.. அவர்களின் அஸ்திரத்தையே எடுக்கும் சிஎஸ்கே.. நாளை தோனி தர போகும் சர்ப்ரைஸ்!

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிராக நாளை நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணி மிகவும் வலிமையான பவுலிங் ஆர்டர் உடன் களமிறங்க உள்ளது. அதேபோல் நாளை சிஎஸ்கே அணியில் ஆல்ரவுண்டர்கள் அதிக அளவில் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நாளை நடைபெறுகிறது. தொடர் தோல்விகள் காரணமாக சென்னை அணி துவண்டு போய் உள்ளது.

இந்த நிலையில் நாளை நடக்கும் போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு எதிரான தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாளை நடக்கும் போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சிஎஸ்கே அணி எப்படி

சிஎஸ்கே அணி எப்படி

இந்த நிலையில் நாளை நடக்கும் போட்டியில் சென்னை அணியின் பவுலிங் ஆர்டர் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நாளை நடக்கும் போட்டியில் சிஎஸ்கேவில் ஆல்ரவுண்டர்கள் அதிகம் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நாளை சிஎஸ்கே 4 ஸ்பின் பவுலர்கள் உடன் களமிறங்கும்.

இரண்டு ஸ்பீட்

இரண்டு ஸ்பீட்

அதேபோல் சிஎஸ்கே இன்னொரு பக்கம் இரண்டு ஸ்பீட் பவுலர்கள் உடன் களமிறங்க உள்ளது. இதெல்லாம் போக நான்கு ஆல் ரவுண்டர்கள் உடன் சிஎஸ்கே நாளை ஹைதராபாத்தை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாளை புதிய அணி உருவாக்கப்படும், அதன்பின் இனி அடுத்த சில போட்டிகளுக்கு இதே அணி தான் தொடரும் என்றும் கூறுகிறார்கள்.

ஆல்ரவுண்டர்

ஆல்ரவுண்டர்

அந்த வகையில் சிஎஸ்கேவில் பிராவோ, ஜடேஜா, சாம் கரன் ஆகிய ஆல் ரவுண்டர்கள் இறங்க உள்ளனர். ஜாதவை கணக்கில் எடுத்தால் அவரையும் சேர்த்து 4 ஆல் ரவுண்டர்கள் களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஸ்பீட் பவுலர்கள் என்று பார்த்தால் பிராவோ மற்றும் சாகர் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ஸ்பின் பவுலர்கள்

ஸ்பின் பவுலர்கள்

இன்னொரு பக்கம் ஸ்பின் பவுலர்களாக ஜடேஜா, சாம் கரன், பியூஸ் சாவ்லா ஆகியோர் இருப்பார்கள். கடைசி நேரத்தில் ஜாதவ் பவுலிங் போடவும் வாய்ப்புள்ளது. நாளைய போட்டியில் கண்டிப்பாக பவுலர்கள்தான் அதிகம் முக்கியத்துவம் பெறுவார்கள். துபாய் பிட்சில் நேற்று நடந்த போட்டியில் குறைந்த ஸ்கோர் மட்டுமே வந்தது.

நேற்று போட்டி

நேற்று போட்டி

இனி துபாயில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாது. அதேபோல் பவுலர்கள்தான் இங்கு முடிவை தீர்மானிப்பார்கள். ஹைதராபாத் அணியின் பவுலிங் ஆர்டர் மிகவும் வலிமையாக உள்ளது. இதனால் ஹைதராபாத்திற்கு போட்டியாக பவுலிங் அஸ்திரத்தை கையில் எடுக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. இங்கு நல்ல பவுலிங் ஆர்டர் உடன் களமிறங்குவது முக்கியம்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

அதிலும் ஹைதராபாத் பேட்ஸ்மேன்களை சமாளிக்க சிஎஸ்கே தனது பவுலர்கள் எல்லோரையும் களமிறக்க வேண்டும். அதனால்தான் நாளை அதிக ஆல் ரவுண்டர்களை இறக்கி அவர்களை பவுலிங் செய்ய வைக்க சிஎஸ்கே நினைக்கிறது. அதே சமயம் நாளை பியூஷ் சாவ்லா ஆடுவது சந்தேகம் என்கிறார்கள். சாவ்லா இல்லையென்றால் வேறு இந்திய ஸ்பின் பவுலரை தோனி சர்ப்ரைசாக களமிறக்க வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, October 1, 2020, 20:59 [IST]
Other articles published on Oct 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+