சிஎஸ்கே செய்த 2 டிவிட்.. அணியில் நடக்கும் மிகப்பெரிய மாற்றம்.. எதிர்பார்க்காத முடிவை எடுத்த தோனி!
துபாய்: நேற்று சிஎஸ்கே அணி நிர்வாகம் செய்த இரண்டு டிவிட் அணியில் செய்யப்படும் மாற்றங்களை உறுதிப்படுத்தி உள்ளது. சிஎஸ்கே அணி தனது அடுத்த போட்டிக்காக அணியில் மிகப்பெரிய மாற்றங்களை செய்து உள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் தற்போது அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. வரிசையாக வெற்றிகளை குவித்து வந்த அணிகள் தோல்வியை சந்திக்க தொடங்கி உள்ளது.
டெல்லி, ராஜஸ்தான் போன்ற அணிகள் தோல்வி பாதைக்கு திரும்பி உள்ளது. ஹைதராபாத், கொல்கத்தா போன்ற அணிகள் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது.

சென்னை எப்படி
இந்த நிலையில் சென்னை தற்போது கண்டிப்பாக வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சென்னை நாளை நடக்கும் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் கண்டிப்பாக சென்னை வெற்றிபெற்றாக வேண்டும். இல்லையென்றால் பிளே ஆப் செல்வதில் சென்னைக்கு சிக்கல் ஏற்படும்.

அணி
சென்னை தனது கடந்த போட்டியில் முரளி விஜய், வாட்சன், டு பிளசிஸ், ரூத்துராஜ், கேதார் ஜாதவ், தோனி, சாம் கரன், ஜடேஜா, சாகர், ஹஸல் வுட், பியூஸ் சாவ்லா ஆகியோருடன் விளையாடியது. ஆனால் அடுத்த போட்டியில் சென்னையில் 2 முக்கியமான வீரர்கள் நீக்கப்பட உள்ளனர்.

நீக்கம் யார்?
சென்னையில் இருந்து முரளி விஜய், ஹசல்வுட் நீக்கப்பட உள்ளனர். சென்னை அணியில் முரளி விஜய் மோசமாக பேட்டிங் செய்து வருகிறார். இதனால் அவரை நீக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. இன்னொரு பக்கம் ஹசல்வுட் நன்றாக பவுலிங் செய்தாலும் வெளிநாட்டு வீரர்கள் கோட்டா காரணமாக அவர் நீக்கப்பட உள்ளார். அவருக்கு பதில் வேறு ஒரு வெளிநாட்டு வீரர் அணிக்கு வருவார்.

சென்னை யார்?
சென்னையில் தற்போது அம்பதி ராயுடு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் காயம் குணமடைந்துள்ளது. அதேபோல் பிராவோ அணியில் இணைவதும் உறுதியாகி உள்ளது . பிராவோ பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு சிஎஸ்கே இதை உறுதி செய்துள்ளது. பிராவோ அணிக்குள் வந்தால் சாம் கரன் நீக்கப்படுவாரா என்று கேள்வி எழுந்தது.

ஆனால் என்ன?
ஆனால் சிஎஸ்கே செய்த இன்னொரு டிவிட்டில் சாம் கரன் விளையாடும் புகைப்படமும் இருந்தது. இதனால் அவரும் அணிக்குள் இருப்பார். இதனால்தான் டெத் ஓவர் போடும் ஹசல் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பிராவோ அடுத்த போட்டிகளில் டெத் ஓவர் வீச உள்ளார். சிஎஸ்கே செய்த இரண்டு டிவிட்டும் இதை உறுதி செய்துள்ளது.

என்ன அணி
இதனால் அடுத்த சிஎஸ்கே போட்டியில் ஆடும் அணி இப்படி இருக்க வாய்ப்புள்ளது - அம்பதி ராயுடு, வாட்சன், டு பிளசிஸ், ரூத்துராஜ், கேதார் ஜாதவ், தோனி, சாம் கரன், ஜடேஜா, பிராவோ, சாகர், பியூஸ் சாவ்லா ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications