கடும் விமர்சனம் எதிரொலி.. சாட்டையை சுழற்ற போகும் தோனி.. இன்றைய போட்டியில் நடக்க போகும் திருப்பம்!
துபாய்: டெல்லிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
ஐபிஎல் தொடரில் இன்று மிக முக்கியமான நாள். ஐபிஎல் தொடரில் வயதான அணி என்று வர்ணிக்கப்படும் சென்னை அணிக்கும், மிக மிக இளமையான அணியான டெல்லிக்கும் இடையே இன்று போட்டி நடக்க உள்ளது.
பஞ்சாப்பிற்கு எதிராக டெல்லி தனது முதல் போட்டியை வென்ற நிலையில், இன்று சென்னையை எதிர்கொள்கிறது. சென்னை தனது முதல் ஐபிஎல் போட்டியில் மும்பையை வீழ்த்தியது.

மும்பையை வீழ்த்தியது
இதற்கு அடுத்து நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வி அடைந்தது. ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் ராஜஸ்தான் 216 ரன்கள் எடுத்தது. ஆனால் சென்னை அணி 200 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. சென்னையின் பேட்டிங் , பவுலிங் இரண்டும் இந்த போட்டியில் மோசமாக இருந்தது.

விமர்சனம் ஏன்?
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் பின்வரும் விஷயங்கள் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது.
1. தோனி கடைசியில் 7வது வீரராக களமிறங்கியது.
2. ஓப்பனிங் வீரர் முரளி விஜய் மோசமாக ஆடியது.
3. டெத் ஓவர்களில் சென்னை மோசமாக பவுலிங் செய்கிறது.
4. லுங்கி மற்றும் சாவ்லா போன்ற பவுலர்கள் சரியாக ஆடாதது என்று முக்கியமான நான்கு விஷயங்கள் விமர்சனத்தை சந்தித்தது.

மாற்றம் என்ன
இந்த நிலையில் சென்னை அணியில் இன்று புதிய ஓப்பனர் இறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இப்போது இருக்கும் முரளி விஜய் இன்று அணியில் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை. அவருக்கு பதில் டு பிளசிஸ் , வாட்சன் ஓப்பனிங் இறங்கலாம். இந்திய வீரர் ரூத்துராஜ் ஒன்டவுன் இறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதே சமயம் இன்று ஒரு போட்டியில் மட்டும் விஜய்க்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து டெஸ்ட் செய்தாலும் செய்வார்கள் என்றும் கூறுகிறார்கள்.

மாற்றம்
இல்லையெனில் விஜய்க்கு பதிலாக இன்னொரு இந்திய வீரர் யாராவது அணிக்குள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. கேஎம் ஆசிப் அணிக்குள் அணிக்குள் வருவார் என்று கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் சாவ்லாவை மாற்ற வாய்ப்பு இல்லை. ஆனால் லுங்கி நிகிடியை நீக்க சிஎஸ்கே ஆலோசனை செய்து வருகிறது.

பிராவோ வருகிறார்
லுங்கிக்கு பதிலாக அவரின் இடத்தில் பிராவோ வருவார் என்கிறார்கள். டெத் ஓவர்களில் பிராவோவின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருக்கும். இவரின் காயம் சரியாகிவிட்டதால் இன்றைய போட்டியில் இவர் மீண்டும் இணைய அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

தோனி பேட்டிங்
அதேபோல் தோனியின் பேட்டிங் ஆர்டர் மாறலாம். தோனி பெரும்பாலும் 5-6 இடங்களில் இன்று களமிறங்குவார். 7வது இடத்தில் களமிறங்க வாய்ப்பு இல்லை. ஆனால் அதுவும் கூட ஸ்கோர், சேசிங்கா, முதலில் பேட்டிங்கா என்பதை பொறுத்தே இருக்கும் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications