Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாப் டுபிளெசிஸ் அதிரடி நீக்கம்.. என்ன நடக்கிறது சிஎஸ்கேவில்? அதிர வைத்த தோனி!

துபாய் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது.

ஏற்கனவே, பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து விட்டது. இந்த நிலையில், சிஎஸ்கே அணி ஒவ்வொரு போட்டியிலும் மாற்றங்கள் செய்து வருகிறது.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அணியின் துவக்க வீரர் பாப் டுபிளெசிஸ் அதிரடியாக நீக்கப்பட்டார். இம்ரான் தாஹிரும் நீக்கப்பட்டார்.

வாய்ப்பு

வாய்ப்பு

சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் வாய்ப்ப இழந்த நிலையில் இயல்பான ஆட்டம் ஆடி ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது. அதே சமயம் அணியில் வாய்ப்பு பெறாத மற்ற வீரர்களை ஆட வைத்து வருகிறார் கேப்டன் தோனி.

நீக்கம்

நீக்கம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் இரண்டு மூத்த வீரர்களான பாப் டுபிளெசிஸ் மற்றும் இம்ரான் தாஹிர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் டுபிளெசிஸ் நீக்கம் யாரும் எதிர்பாராத மாற்றமாக இருந்தது.

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

அவருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டு இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. அவருக்கு பதில் ஷேன் வாட்சன் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். இம்ரான் தாஹிருக்கு பதில் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் ஜடேஜா, கரன் சர்மா மற்றும் மிட்செல் சான்ட்னர் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். தீபக் சாஹர், சாம் கர்ரன், லுங்கி நிகிடி வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி விவரம் - ருதுராஜ் கெயிக்வாட், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், ஜெகதீசன், மிட்செல் சான்ட்னர், கரன் சர்மா, தீபக் சாஹர், லுங்கி நிகிடி

Story first published: Thursday, October 29, 2020, 19:45 [IST]
Other articles published on Oct 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+