Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க 2 பேருக்குமா சப்போர்ட் பண்ணோம்? இதை எதிர்பார்க்கவே இல்லை.. உறைந்து போன சிஎஸ்கே ரசிகர்கள்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெயிக்வாட், ஜெகதீசன் என இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தார் தோனி.

கடந்த போட்டிகளில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

அந்த அழுத்தம் காரணமாக அவர்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுத்தார் கேப்டன் தோனி. அவர்கள் இருவரும் டக் அவுட் ஆகி பெரும் அதிர்ச்சி அளித்தனர்.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி மோசமான தோல்விகளால் பிளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது. அந்த அணியில் இளம் வீரர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனாலும், கேப்டன் தோனி அதை கண்டு கொள்ளவில்லை.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை

இளம் வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட், ஜெகதீசன் ஆகியோருக்கு ஒரீரு போட்டிகள் மட்டுமே வாய்ப்பு அளித்தார் தோனி. இங்கிலாந்து அணியை சேர்ந்த இளம் வீரர் சாம் கர்ரன் மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு பெற்று வந்தார்.

ஸ்பார்க் கருத்து

ஸ்பார்க் கருத்து

கடந்த போட்டியில் தோல்விக்கு பின் கேப்டன் தோனி பேசுகையில் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என கூறியது பெரும் சர்ச்சை ஆனது. வயதான வீரர்களிடம் மட்டும் ஸ்பார்க் உள்ளதா? என விமர்சகர்கள், ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

அணியில் வாய்ப்பு

அணியில் வாய்ப்பு

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட், ஜெகதீசன் அணியில் வாய்ப்பு பெற்றனர். அவர்கள் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டதை ரசிகர்கள் வரவேற்றனர். அந்த மகிழ்ச்சி எல்லாம் சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

டக் அவுட்

டக் அவுட்

மும்பை அணியின் அதிரடி வேகப் பந்துவீச்சில் தாக்குப் பிடிக்க முடியாமல் ருதுராஜ் முதல் ஓவரிலேயே ஐந்து பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். அடுத்து ஜெகதீசன் 2வது ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

தாங்கள் அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என ஆதரவு கோரிய இரண்டு இளம் வீரர்களும் டக் அவுட் ஆனதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இரு வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் வரிசையாக விக்கெட்களை இழந்தது.

சிஎஸ்கே சரிவு

சிஎஸ்கே சரிவு

சிஎஸ்கே அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. அதன் பின் ஜடேஜா, தோனி ஆகியோரும் அணியை கைவிட்டனர். சிஎஸ்கே அணி 8.5ஓவர்களில் ௪௩ ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்கள் இழந்து இருந்தது. சாம் கர்ரன் மட்டுமே ஓரளவு ரன் சேர்த்து சிஎஸ்கே மானத்தை காப்பற்றினார்.

Story first published: Friday, October 23, 2020, 21:01 [IST]
Other articles published on Oct 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+