Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

படுதோல்வி.. சிஎஸ்கே வரலாற்றிலேயே மோசமான ஆட்டம்.. ரோஹித் இல்லாமலேயே மும்பை மாபெரும் வெற்றி!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரில் 41வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து ஆடிய மும்பை அணி இந்த எளிய இலக்கை விக்கெட் இழப்பின்றி ஆடி மாபெரும் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி அந்த அணியின் வரலாற்றில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

2020 ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வாட்சன், ஜாதவ், பியுஷ் சாவ்லா நீக்கப்பட்டனர்.

சிஎஸ்கே பரிதாபம்

சிஎஸ்கே பரிதாபம்

சிஎஸ்கே அணியின் பேட்டிங் இதுவரை இந்த சீசனில் இல்லாத அளவு மோசமாக அமைந்தது. முதல் ஓவரில் ருதுராஜ் கெயிக்வாட் டக் அவுட் ஆனார். சிஎஸ்கே அணி வரிசையாக ராயுடு 2, டுபிளெசிஸ் 1, ஜெகதீசன் 0 ரன்களுக்கு இழந்தது.

சாம் கர்ரன்

சாம் கர்ரன்

3 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தவித்த சிஎஸ்கே அணி, அடுத்து ஜடேஜா 7, தோனி 16, தீபக் சாஹர் 0 ரன்களுக்கு இழந்தது. 43 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து தவித்தது சிஎஸ்கே. அப்போது சாம் கர்ரன் மட்டுமே தனி ஆளாக நின்று பொறுப்பாக ஆடினார்.

கர்ரன் அரைசதம்

கர்ரன் அரைசதம்

சாம் கர்ரன் பின்வரிசை வீரர்கள் ஷர்துல் தாக்குர், இம்ரான் தாஹிர் ஆகியோருடன் கூட்டணி அமைத்து ரன் குவித்தார். அரைசதம் கடந்து, சிஎஸ்கே அணியை 100 ரன்களை கடக்கச் செய்து மானத்தை காப்பாற்றினார். 20வது ஓவரின் கடைசி பந்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.

மும்பை பவுலிங் அபாரம்

மும்பை பவுலிங் அபாரம்

சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியின் பந்துவீச்சு அபாரமாக அமைந்தது. ட்ரென்ட் போல்ட் 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். பும்ரா 2, ராகுல் சாஹர் 2 விக்கெட் வீழ்த்தினர். நாதன் கோல்டர் நைல் 1 விக்கெட் வீழ்த்தினார்.

ஒரு விக்கெட் கூட இல்லை

ஒரு விக்கெட் கூட இல்லை

அடுத்து 115 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு க்வின்டன் டி காக், இஷான் கிஷன் துவக்கம் அளித்தனர். ரோஹித் சர்மா இல்லாததால் கிஷன் அவரது இடத்தில் பேட்டிங் செய்தார். அவர்கள் இருவரின் விக்கெட்டை சிஎஸ்கே அணியால் கடைசி வரை வீழ்த்த ம,முடியவில்லை.

மும்பை வெற்றி

மும்பை வெற்றி

டி காக் 37 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 37 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை கடந்தது. 10 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி மும்பை அணி மாபெரும் வெற்றி பெற்றது.

மோசமான தோல்வி

மோசமான தோல்வி

சிஎஸ்கே வரலாற்றில் இதுவரை அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததே இல்லை. ஆனால், இந்த முறை அந்த அணி மும்பையிடம் படுதோல்வி அடைந்துள்ளது. மேலும், அதிக பந்துகள் மீதமுள்ள நிலையில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த பட்டியலிலும் இந்தப் போட்டி முதல் இடத்தை பெற்றுள்ளது.

Story first published: Friday, October 23, 2020, 23:06 [IST]
Other articles published on Oct 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+