Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவமானம்.. அழுத்தம்.. சத்தமே இல்லாமல் நிகழ்ந்த வரலாற்று சாதனை.. சிஎஸ்கே ஜோடி!

ஷார்ஜா : சென்னை சூப்பர் கிங்ஸ் தன் மோசமான ஐபிஎல் போட்டியை ஆடிய அதே நேரத்தில், சிஎஸ்கே ஜோடி ஐபிஎல் தொடரில் வரலாற்று சாதனை ஒன்றையும் நிகழ்த்தியது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தான் சிஎஸ்கே அணியின் சாம் கர்ரன் - இம்ரான் தாஹிர் சாதனை செய்தனர்.

சிஎஸ்கே சரிவு

சிஎஸ்கே சரிவு

சிஎஸ்கே அணி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. 3 ரன்கள் எடுத்து முதல் 4 விக்கெட்களை இழந்து பெரும் அதிர்ச்சி அளித்தது சிஎஸ்கே அணி. அப்போதே சிஎஸ்கே அணியின் தோல்வி இந்தப் போட்டியில் எழுதப்பட்டது.

மோசமான சாதனை

மோசமான சாதனை

சிஎஸ்கே அணி பவர்பிளே ஓவர்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து இருந்தது. இது சிஎஸ்கே அணியின் வரலாற்றில் மோசமான சாதனை ஆகும். சிஎஸ்கே அணி 100 ரன்கள் கூட தாண்டாது என அப்போது கணிக்கப்பட்டது. ஆனால், சாம் கர்ரன் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சாம் கர்ரன் ஆட்டம்

சாம் கர்ரன் ஆட்டம்

தோனி, ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் கூட சிஎஸ்கே அணியை கைவிட்ட நிலையில் சாம் கர்ரன் தனி ஆளாக போராட்டத்தை வெளிப்படுத்தினார். பின் வரிசை வீரர்களுடன் இணைந்து அவர் அரைசதம் கடந்தார். 47 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.

ஒத்துழைத்த இம்ரான் தாஹிர்

ஒத்துழைத்த இம்ரான் தாஹிர்

ஷர்துல் தாக்குர் உடன் முதலில் இணைந்து ஆடிய அவர், அதன் பின் 9வது விக்கெட்டுக்கு இம்ரான் தாஹிர் உடன் இணைந்து ஆடினார். தாஹிர் பெரிய பேட்டிங் ரெக்கார்டு இல்லாத வீரர். எனினும், கர்ரனுக்கு ஒத்துழைத்து ஆடினார். அவர் 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார்.

வரலாற்று சாதனை

வரலாற்று சாதனை

சாம் கர்ரன் - இம்ரான் தாஹிர் ஜோடி 9 அது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தனர். ஐபிஎல் வரலாற்றில் 9வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடி என்ற பெருமையை இவர்கள் கூட்டணி பெற்றது. இந்த கூட்டணியால் சிஎஸ்கே அணி 100 ரன்களை கடந்தது.

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 12.2 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் சிஎஸ்கே நிர்ணயித்த 115 ரன்கள் வெற்றி இலக்கை எட்டியது. சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது.

நம்பிக்கை நாயகன்

நம்பிக்கை நாயகன்

சிஎஸ்கே அணி மோசமான விக்கெட் வீழ்ச்சியால் கடும் அவமானத்தை, விமர்சனத்தை சந்தித்து வந்த அதே நேரத்தில் அந்த அழுத்தத்தை சமாளித்து தாஹிர் - கர்ரன் ஜோடி ரன் குவித்துள்ளது.

Story first published: Friday, October 23, 2020, 23:59 [IST]
Other articles published on Oct 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+