For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது சிஎஸ்கே டீமே இல்லை.. 3 ரன்னுக்கு 4 விக்கெட்.. மும்பை போட்டியில் மானத்தை காப்பாற்றிய சாம்!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே ஆன லீக் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி மிக மோசமாக ஆடி விக்கெட்களை வரிசையாக இழந்து அதிர்ச்சி அளித்தது.

சாம் கர்ரன் மட்டுமே பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்து 50 ரன்களுக்குள் சுருண்டு போக இருந்த சிஎஸ்கே அணியின் மானத்தை காப்பாற்றினார்.

அணி மாற்றம்

அணி மாற்றம்

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக இடம் பெறவில்லை. சிஎஸ்கே அணியில் அதிரடியாக மூன்று வீரர்கள் நீக்கப்பட்டனர். ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், பியுஷ் சாவ்லா நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதில் ருதுராஜ் கெயிக்வாட், ஜெகதீசன், இம்ரான் தாஹிர் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றனர்.

சிஎஸ்கே பேட்டிங்

சிஎஸ்கே பேட்டிங்

சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. ட்ரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ருதுராஜ் கெயிக்வாட் 5 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தது.

விக்கெட்கள் சரிவு

விக்கெட்கள் சரிவு

பும்ரா வீசிய 2வது ஓவரில் அம்பதி ராயுடு ஆட்டமிழந்தார். அடுத்து 3வது ஓவரில் பாப் டுபிளெசிஸ், ஜெகதீசன் ஆட்டமிழந்தனர். சிஎஸ்கே அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது. அடுத்து தோனி - ஜடேஜா ஜோடி சேர்ந்தனர்.

கைவிட்ட ஜடேஜா - தோனி

கைவிட்ட ஜடேஜா - தோனி

அவர்கள் இருவரும் சேர்ந்து சிஎஸ்கே அணியை மீட்பார்கள் என ரசிகர்கள் நம்பினர். ஆனால், அவர்களும் பெரிய அளவில் ஏமாற்றம் அளித்தனர். தோனி 16, ஜடேஜா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தீபக் சாஹர் டக் அவுட் ஆனார்.

சாம் ஆட்டம்

சாம் ஆட்டம்

சிஎஸ்கே அணி 43 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தவித்து வந்தது. அப்போது சாம் கர்ரன் தனி ஆளாக போராடி அணியின் மானத்தை காத்தார். அவர் கடைசி பந்தில் தான் ஆட்டமிழந்தார். 47 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார்.

சிஎஸ்கே ஸ்கோர்

சிஎஸ்கே ஸ்கோர்

சாம் கர்ரன் ஆட்டத்தால் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. 50 ரன்களுக்குள் சுருண்டு போக வேண்டிய சிஎஸ்கே 100 ரன்களை கடந்தது. வலுவான மும்பை அணிக்கு இது மிகவும் எளிதான ஸ்கோராக அமைந்தது.

Story first published: Friday, October 23, 2020, 22:28 [IST]
Other articles published on Oct 23, 2020
English summary
IPL 2020 CSK vs MI : Sam Curran saved CSK from big fall
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+