Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விருப்பமில்லாத தோனி.. கடைசி அஸ்திரத்தையும் கையில் எடுத்தது சிஎஸ்கே.. 2 பேருமே வெளியேறுகிறார்கள்!

துபாய்: சிஎஸ்கேவில் இருக்கும் இரண்டு முக்கியமான வீரர்கள் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று தகவல்கள் வருகிறது.

2020 ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு அவ்வளவு சிறப்பான தொடராக இல்லை. தொடரின் முதல் போட்டியில் மட்டும் மும்பைக்கு எதிராக சிஎஸ்கே வெற்றிபெற்றது.

அதன்பின் வரிசையாக மூன்று போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

ராஜஸ்தான் மற்றும் டெல்லிக்கு எதிரான போட்டிகளில் தோல்வி அடைந்த பின் சென்னை அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்டது. ஓப்பனிங் வீரர் முரளி விஜய் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும், பிராவோ, அம்பதி ராயுடுவை அணியில் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.

கோரிக்கைகள்

கோரிக்கைகள்

அதோடு பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும். அணியில் டு பிளசிஸ் அல்லது அம்பதி ராயுடு ஓப்பனிங் இறங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. தோனி இந்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றினார். அதேபோல் நேற்று இறங்கிய சென்னை அணியில் இருந்து முரளி விஜய், ருது ராஜ், ஜோஸ் ஹசல்வுட் நீக்கப்பட்டனர்.

நீக்கம்

நீக்கம்

அவர்களுக்கு பதிலாக பிராவோ, அம்பதி ராயுடு, ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். ஆனால் நேற்று அணியில் மாற்றம் செய்யப்பட்ட பின்பும் பெரிதாக பேட்டிங் பலன் அளிக்கவில்லை. எப்போதும் போல் வாட்சன் மோசமாக ஆடினார். அதேபோல் இடையில் இறங்கிய கேதார் ஜாதவ் மிக மோசமாக பேட்டிங் செய்தார்.

ஏன் இருக்கிறார்

ஏன் இருக்கிறார்

கேதார் ஜாதவ் ஏன் அணியில் இருக்கிறார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இவர் அணியில் இருந்து பவுலிங்கும் செய்வது இல்லை, பேட்டிங்கும் செய்வது இல்லை என்று புகார் உள்ளது. இதனால் இவரை நீக்க வேண்டும். அதேபோல் வாட்சனுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டது. இனியும் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க கூடாது.

ஓப்பனிங் சரியில்லை

ஓப்பனிங் சரியில்லை

ஓப்பனிங் சரியில்லாத காரணத்தால்தான் சிஎஸ்கே தோல்வி அடைகிறது. இதனால் ஜாதவ், வாட்சன் இருவரையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாட்சனை மாற்றுவதில் தோனிக்கு விருப்பம் இல்லை என்கிறார்கள். கேதார் ஜாதவை நீக்குவது கூட ஓகே, வாட்சனை நீக்க வேண்டாம் என்று தோனி நினைப்பதாக கூறுகிறார்கள்.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில்தான் சிஎஸ்கே நிர்வாகம் மொத்தமாக ரெய்னா, ஹர்பஜன் இருவரின் ஒப்பந்தத்தையும் நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக இரண்டு புதிய ஒப்பனர்களை கொண்டு வரும் என்கிறார்கள். அதாவது இரண்டு பேரை நீக்கிவிட்டால் அவர்களுக்கான மாற்று வீரர்களை பெற முடியும். அந்த விதியை பயன்படுத்தி மாற்று வீரர்களை கொண்டுவர சிஎஸ்கே நினைக்கிறது. இந்த இரண்டு புதிய வீரர்களும் சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டர் ஆட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இருவரும் இல்லை

இருவரும் இல்லை

அடுத்த இரண்டு போட்டிக்கு முன் இந்த மாற்றம் நடக்கும் என்கிறார்கள். அடுத்த போட்டியில் வாட்சன் விளையாடுவார். ஆனால் கேதார் ஜாதவ் விளையாட மாட்டார். மாற்று வீரர்கள் வந்த பின் மொத்தமாக வாட்சன், ஜாதவ் ஆகிய இரண்டு பேருமே 11 பேர் கொண்ட ஆடும் அணியில் இருந்து வெளியேறுவார்கள் என்று கூறப்படுகிறது. புதிய வெளிநாட்டு வீரர் உடன் டு பிளசிஸ் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

Story first published: Saturday, October 3, 2020, 19:02 [IST]
Other articles published on Oct 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+