Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் இனிமே சிஎஸ்கே டீம்.. அதிரடியாக சொன்ன தோனி.. அணியில் 2 முக்கியமான மாற்றம்.. செம டிவிஸ்ட்!

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே மோதும் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் 2 முக்கியமான மாற்றங்ளை கேப்டன் தோனி இன்று செய்ய இருக்கிறார்.

இன்று சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. வரிசையாக இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை இன்று துபாய் மைதானத்தில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.

கடைசியாக ராஜஸ்தான் மற்றும் டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை தோல்வி அடைந்தது. இதனால் இன்று நடக்கும் போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

சென்னை பிளேயிங் லெவன்

சென்னை பிளேயிங் லெவன்

இன்று நடக்கும் போட்டியில் சென்னையில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. அணியில் இருந்து வாட்சன் கண்டிப்பாக நீக்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக முரளி விஜய் நீக்கப்படுவார். முரளி விஜய்க்கு பதிலாக அம்பதி ராயுடு ஆட உள்ளார்.

ஓப்பனிங் யார்

ஓப்பனிங் யார்

அம்பதி மற்றும் வாட்ஸன் ஆகியோர் இன்று ஓப்பனிங் இறங்க உள்ளார். ஓப்பனிங் இறங்குவதற்காக அம்பதி ராயுடு கடந்த 4 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அணியில் இருந்து இன்று ஹசல் வுட் நீக்கப்பட உள்ளார். இவர் கடந்த போட்டியில் நன்றாக விளையாடினாலும் இன்று நடக்கும் போட்டியில் விளையாட மாட்டார்.

மாட்டார்?

மாட்டார்?

இவருக்கு பதிலாக இன்று அணிக்குள் பிராவோ இடம்பெற உள்ளார். இவர் சென்னை அணிக்காக 7அல்லது 6வது இதத்தில் பேட்டிங் செய்ய உள்ளார். சென்னை அணி இன்று இரண்டு ஸ்பீட் பவுலர்கள் உடன் மட்டுமே விளையாட உள்ளது. பிராவோ அணிக்குள் வந்தது கண்டிப்பாக அணிக்கு பலம் சேர்க்கும்.

டெத் ஓவர்கள்

டெத் ஓவர்கள்

டெத் ஓவர்களில் பிராவோ கண்டிப்பாக சிறப்பாக பவுலிங் வீசுவார். சென்னை அணியில் கடந்த சில நாட்களாக இது மட்டுமே பிரச்சனையாக இருந்தது. தற்போது பிராவோவின் வருகையால் அந்த பிரச்சனை சரியாகி உள்ளது. கடந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி டெத் ஓவர்களில் அதிக ரன்கள் கொடுத்ததே சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜா பார்ம்

ஜடேஜா பார்ம்

இந்த நிலையில் சரியாக நேற்று ஜடேஜா பார்மிற்கு திரும்பினார் என்றும் தகவல்கள் வருகிறது. பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக ஆடினார் என்று தகவல்கள் வந்துள்ளது. கடந்த 4 நாட்கள் பயிற்சி ஜடேஜாவிற்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. கண்டிப்பாக இன்றைய போட்டியில் அவர் சிறப்பாக ஆடுவார் என்றும் கூறுகிறார்கள்.

என்ன டீம்

என்ன டீம்

அதன்படி சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடு, வாட்சன், டு பிளசிஸ், ரூத்துராஜ், கேதார் ஜாதவ், தோனி, சாம் கரன், ஜடேஜா , பிராவோ, சாகர், பியூஸ் சாவ்லா ஆகியோர் ஒன்று ஆட உள்ளனர். அதேபோல் இதுதான் இனி சிஎஸ்கே டீம். பிளே ஆப் வரை இதில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இல்லை என்று தோனி நேற்று முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, October 2, 2020, 9:07 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+