"சில போட்டிகளில் அவர் மாட்டார்".. டாஸ் போடும்போதே தோனி அந்த சொன்ன விஷயம்.. என்ன நடந்தது?
துபாய்: ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் சிஎஸ்கே டாஸ் வென்றது. டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங் தேர்வு செய்தது. இதில் பேசிய தோனி, சிஎஸ்கே வீரர் பிராவோ இன்னும் சில போட்டிகளில் ஆட மாட்டார் என்று அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபுதாபியில் நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி தற்போது பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
இன்று சிஎஸ்கே தோல்வி அடைந்தால் பிளே ஆப் செல்வது கனவாகிவிடும். இதனால் சிஎஸ்கே வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஏன்
இந்த நிலையில் இன்று வெற்றிபெறும் முனைப்புடன் சிஎஸ்கே கேப்டன் தோனி இன்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இன்று விளையாடும் சிஎஸ்கே அணியில் பிராவோ காயம் காரணமாக விளையாடவில்லை. இன்னும் சில போட்டிகள் அவர் ஆட மாட்டார் என்று தோனி கூறியுள்ளார்.

காயம்
காயம்தான் சிஎஸ்கே அணிக்கு சிக்கலாக இருக்கிறது. இனி வரும் போட்டிகளில் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய பிட்ச் இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் செய்ய வசதியாக இருக்கும். இதனால் முதலில் பேட்டிங் தேர்வு செய்ததாக தோனி கூறியுள்ளார் .

யார் வருகிறார்கள்
அதேபோல் இன்று போட்டியில் கரன் சர்மா இடம்பெறவில்லை. மாறாக அவருக்கு பதிலாக அணியில் மீண்டும் பியூஸ் சாவ்லா உள்ளே வந்து இருக்கிறார். அதேபோல் அணிக்குள் பிராவோவிற்கு பதிலாக ஜோஸ் ஹசல்வுட் இடம் பிடித்துள்ளார்.

ஆடும் அணி
ராஜஸ்தானுக்கு அணிக்கு எதிராக இன்று ஆடும் சிஎஸ்கே அணியில் சாம் கரன், டு பிளசிஸ், வாட்சன், ராயுடு, தோனி, ஜடேஜா, ஹசல்வுட், சாவ்லா, சாகர், ஷர்துல் தாகூர் ஆகியோர் ஆடுகிறார்கள்.


Click it and Unblock the Notifications