Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாட்சன் கேம் ஓவர்.. கடைசி போட்டிக்கு ஸ்பெஷல் டீமை இறக்கிய தோனி.. பஞ்சாபிற்கு ஆரம்பமே அதிரடி செக்!

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே டாஸ் வென்றது. டாஸ் வென்ற கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்துள்ளார். சிஎஸ்கேவின் கடைசி போட்டியில் வாட்சன் இடம்பெறவில்லை.

ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் இன்று சிஎஸ்கே அணி ஆட உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி தகுதி பெறாத நிலையில் இன்று கடைசி லீக் போட்டியில் ஆடுகிறது.

இதனால் இன்று சிஎஸ்கே அணி வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. வெற்றியோடு தொடரை முடித்து மரியாதையோடு வெளியேற சிஎஸ்கே அணி முடிவு செய்துள்ளது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இன்று நடக்கும் போட்டி பஞ்சாப் அணிக்கு வாழ்வா, சாவா போட்டி ஆகும். இதுவரை மொத்தம் 13 போட்டிகளில் ஆடி உள்ள பஞ்சாப் 6 போட்டிகளில் வென்றுள்ளது. இன்றைய போட்டியில் பஞ்சாப் கண்டிப்பாக வெல்ல வேண்டும்

செம

செம

இன்று வென்றால்தான் பஞ்சாப் அணி பிளே ஆப் ரேஸில் இருக்க முடியும். அதிலும் இன்று அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற வேண்டும். ஆனால் இப்படி முக்கியமான ஆட்டத்தில் பஞ்சாப் அணி டாஸ் தோல்வி அடைந்துள்ளது.

செக்

செக்

இன்று டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்த சீஸனின் இரண்டாம் பாதியில் அதிகமாக சேசிங் செய்யும் அணியே வெற்றிபெறுகிறது. பிட்சும் இப்போதெல்லாம் சேசிங் செய்ய வசதியாக இருக்கிறது. இதனால் டாஸ் வென்றது தற்போது சென்னை அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. சென்னை அணியின் வெற்றிக்கு இது சாதகமாக மாறியுள்ளது.

சென்னை அணி

சென்னை அணி

இன்று ஆடும் சென்னை அணியில், டு பிளசிஸ், ரூத்துராஜ், அம்பதி ராயுடு, தோனி, என் ஜெகதீசன், ஜடேஜா, சாம் கரன், ஷார்தூல், தீபக் சாகர், லுங்கி நிகிடி, இம்ரான் தாஹிர் ஆகியோர் இறங்கி உள்ளனர். பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால், ராகுல், கிறிஸ் கெயில், பூரான், மன்தீப் சிங், ஜேம்ஸ் நீசன், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், முருகன் அஸ்வின், ரவி பிஸ்னோய், ஷமி ஆகியோர் ஆடுகிறார்கள்.

வாட்சன்

வாட்சன்

இன்று ஆடும் சிஎஸ்கே அணியில் தோனி தனக்கு விருப்பமான அணியை களமிறக்கி உள்ளார். அதேபோல் இன்று வாட்சன் இடம் பெறவில்லை. இன்றுதான் சிஎஸ்கே ஆடும் கடைசி ஆட்டம். அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் வாட்சன் இடம்பெறுவது சந்தேகம் என்பதால்.. அவருடைய கேம் கடந்த போட்டியோடு முடிந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.

Story first published: Sunday, November 1, 2020, 15:24 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+