Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சம்மட்டி அடி.. அதிர வைத்த மும்பை இந்தியன்ஸ்.. இமாலய வெற்றி.. சரண்டர் ஆன டெல்லி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி அடுத்து பேட்டிங்கிலும் ஆதிக்கம் செலுத்தியது.

9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது.

டெல்லி பேட்டிங்

டெல்லி பேட்டிங்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் 25, ரிஷப் பண்ட் 21 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

டெல்லி அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆடி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த தொடரில் இரண்டு சதம் அடித்த ஷிகர் தவான் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை பந்துவீச்சு

மும்பை பந்துவீச்சு

மும்பை அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. பும்ரா, ட்ரென்ட் போல்ட் ஓவர்களில் ரன் குவிக்க திணறிய டெல்லி இருவரிடமும் தலா 3 விக்கெட்களை பறிகொடுத்தது. கோல்டர் நைல், ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

சேஸிங்

சேஸிங்

அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்யத் துவங்கியது. இஷான் கிஷன், டி காக் துவக்கம் அளித்தனர். டி காக் நிதான ஆட்டம் ஆடினார். அவர் 28 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷனுக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடினார்.

இமாலய வெற்றி

இமாலய வெற்றி

இஷான் கிஷன் 47 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். 14.2 ஓவரில் வெற்றி இலக்கை சிக்ஸ் அடித்து எட்டச் செய்தார் அவர். மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இது டெல்லி அணிக்கு பெரும் தோல்வியாக அமைந்தது.

நான்கு தோல்விகள்

நான்கு தோல்விகள்

டெல்லி அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான நிலைக்கு சென்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட டெல்லி தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் நான்காம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியை விட கீழே சென்றுள்ளது.

Story first published: Saturday, October 31, 2020, 19:10 [IST]
Other articles published on Oct 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+