Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

DC vs MI : பாண்டியா இல்லையா? மும்பை இந்தியன்ஸ் அணியில் பரபர மாற்றம்.. இதுதான் காரணம்!

துபாய் : டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் லீக் போட்டி துபாயில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

51வது லீக் போட்டி

51வது லீக் போட்டி

மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையே ஆன 51வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது, இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றது. அந்த அணியின் கேப்டன் கீரான் பொல்லார்டு பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியது.

மும்பை மாற்றம்

மும்பை மாற்றம்

மும்பை அணியில் அதிரடியாக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் இளம் வீரர் ஜெயந்த் யாதவ் அணியில் வாய்ப்பு பெற்றார். ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார் பொல்லார்டு.

பாட்டின்சன் நீக்கம்

பாட்டின்சன் நீக்கம்

மேலும், கடந்த சில போட்டிகளில் ரன்களை வாரி இறைத்து வந்த ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் நாதன் கோல்டர்நைல் அணியில் வாய்ப்பு பெற்றார். ரோஹித் சர்மா இந்தப் போட்டியிலும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

டெல்லி அணி மாற்றம்

டெல்லி அணி மாற்றம்

டெல்லி அணியில் ப்ரித்வி ஷா, ஹர்ஷல் பட்டேல் மீண்டும் அணியில் இடம் பெற்றனர். பிரவீன் துபே அந்த அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். மோசமாக ஆடி வந்த மூத்த வீரர் ரஹானே டெல்லி அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

Story first published: Saturday, October 31, 2020, 16:06 [IST]
Other articles published on Oct 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+