Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர் முடியும் போது இப்படியா? தேவையில்லாத சண்டை.. களத்தில் மோதிக்கொண்ட 2 மூத்த வீரர்கள்.. ஷாக்!

துபாய்: நேற்று டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் இரண்டு மூத்த வீரர்கள் களத்திலேயே மோதிக்கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையில் செமி பைனல் போட்டி நடைபெற்றது. பைனலில் மும்பையை எதிர்கொள்ள போகும் அணி எது என்பதற்கான கடுமையான மோதல் நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 189 ரன்கள் எடுத்தது. அதன்பின் மிகவும் திரில்லாக சென்ற சேஸிங்கில் ஹைதராபாத் அணி தேவை இல்லாமல் சொதப்பி வெறும் 172 மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் டெல்லி அணியின் வெற்றிக்கு ஸ்டாய்னிஸ்தான் முக்கியமான காரணமாக இருந்தார். இவர் நேற்று டெல்லி அணிக்காக ஓப்பனிங் பேட்டிங் இறங்கினார். பேட்டிங் இறங்கிய ஸ்டாய்னிஸ் 27 பந்தில் 38 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். இதனால் டெல்லி அணியின் பேட்டிங் ஆர்டர் நேற்று நம்பிக்கை அளித்தது.

பவுலிங்

பவுலிங்

அதேபோல் நேற்று பவுலிங்கிலும் ஸ்டாய்னிஸ் சிறப்பாக பந்து வீசினார். 3 ஓவர் வீசிய ஸ்டாய்னிஸ் வெறும் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். மொத்தமாக இவரின் பவுலிங் பேட்டிங் இரண்டும்தான் டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

சண்டை

சண்டை

இந்த நிலையில்தான் நேற்று ஸ்டாய்னிஸ் உடன் ரஷீத் கான் களத்தில் மோதியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ரஷீத் கான் போட்ட 9வது ஓவரில் ஸ்டாய்னிஸ் போல்டானார். அப்போதுதான் இவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.. ஸ்டாய்னிஸ் விக்கெட்டை எடுத்துவிட்டு ரஷீத் கான் கோபமாக கத்தினார்.

திட்டினார்

திட்டினார்

ஸ்டாய்னிஸ் அருகே வந்து அவரை திட்டுவது போல கோபமாக கத்தினார். ஸ்டாய்னிஸ் முகத்தை பார்த்து மோசமான வார்த்தைகளில் ரஷீத் கான் கத்தினார். இதை பார்த்த ஸ்டாய்னிஸ் கோபம் அடைந்தார். ஆனால் எதுவும் சொல்லாமல் பெவிலியன் சென்றுவிட்டார். அதன்பின் ரஷீத் கான் பேட்டிங் செய்த போது.. இதேபோல் ஸ்டாய்னிஸ் பவுலிங் செய்தார்.

விக்கெட்

விக்கெட்

அப்போது சரியாக ரஷீத் கான் விக்கெட்டை ஸ்டாய்னிஸ் எடுத்தார். இதையடுத்து ஸ்டாய்னிஸ் ரஷீத் கானை பார்த்து கோபமாக கத்தினார்., அதோடு மோசமான வார்த்தையிலும் திட்டினார். தேவையில்லாமல் சீண்டிய ரஷீத் கானுக்கு ஸ்டாய்னிஸ் வசமாக பதிலடி கொடுத்தார். இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இப்படி களத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

Story first published: Monday, November 9, 2020, 8:25 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+