Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சின்ன பசங்களை கட்டுப்படுத்தி.. டீமை காலி செய்துவிட்டார்.. சர்ச்சையில் மாட்டிய ஆஸி ஜாம்பவான்..பின்னணி

துபாய்: டெல்லி அணியின் தொடர் தோல்விக்கு அணிக்குள் பாண்டிங் எடுக்கும் முடிவுகள்தான் முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் திடீர் திருப்பமாக புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அணிகள் தொடர் வெற்றிகளை குவிக்க தொடங்கி உள்ளது. பஞ்சாப், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் தொடர் வெற்றிகள் மூலம் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தை பிடிக்க போராடி வருகிறது.

ஆனால் இன்னொரு பக்கம் டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற டாப் அணிகள் இந்த முறை மிக மோசமாக சொதப்பி தொடர் தோல்விகளை தழுவி வருகிறது.

தோல்வி

தோல்வி

அதிலும் டெல்லிதான் மிக மோசமாக ஆடி வருகிறது. முதல் 7 போட்டிகளில் 6 போட்டிகளை வரிசையாக வென்ற டெல்லி போக போக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிலும் கடந்த மூன்று போட்டிகளில் எல்லா போட்டியிலும் டெல்லி வரிசையாக தோல்வி அடைந்துள்ளது.

மோசம்

மோசம்

டெல்லி அணியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று எல்லாமே மிக மோசமாக மாறியுள்ளது. தவான் அவுட் ஆனால் மொத்தமாக அணியில் இருக்கும் மற்ற வீரர்கள் அவுட்டாகி விடுகிறார்கள். பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், பண்ட் என்று தொடரின் தொடக்கத்தில் நன்றாக ஆடிய வீரர்கள் யாருமே இப்போது சரியாக ஆடுவது இல்லை.

சந்தேகம்

சந்தேகம்

தொடக்கத்தில் ஆடிய அதே டெல்லி அணிதான் இதுவா என்று சந்தேகம் வரும் அளவிற்கு டெல்லி அணி மோசமாக சொதப்ப தொடங்கி உள்ளது. டெல்லி அணியின் இந்த திடீர் சொதப்பலுக்கு அணியின் பயிற்சியாளர் பாண்டிங்தான் காரணம் என்கிறார்கள். அவசரப்பட்டு பாண்டிங் எடுத்த சில முடிவுகள்தான் அணியின் சொதப்பலுக்கு காரணம் என்கிறார்கள்.

சிறுவர்

சிறுவர்

வீரர்கள் எல்லோரும் இளைஞர்கள் என்பதால் அவர்களை கட்டுப்படுத்தி பாண்டிங் தவறாக வழி நடத்துகிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.ஒரு சில போட்டிகளில் சொதப்பியதற்காக பிரித்வி ஷாவை நீக்கிவிட்டார். அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு பாண்டிங் ஆதரவு கொடுப்பது இல்லை. வீரர்களை சுயமான முடிவு எடுக்க விடுவது இல்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

சுயம்

சுயம்

முக்கியமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை சுயமாக முடிவு எடுக்க பாண்டிங் விடுவது இல்லை. அணிக்குள் எல்லாமே பாண்டிங்தான். நேற்று பேட்டிங் ஆர்டரில் கூட டெல்லி சொதப்பியது. இதற்கு பாண்டிங் எடுத்த முடிவுதான் காரணம் என்கிறார்கள். அணிக்குள் வீரர்களை விட பயிற்சியாளரின் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கிறது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, October 28, 2020, 11:52 [IST]
Other articles published on Oct 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+