
இன்று போட்டி
இன்னொரு பக்கம் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி வலிமையான அணியாக உள்ளது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் 2 போட்டிகளில் வென்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஸ்மித், சஞ்சு சாம்சன் , ஜோஸ் பட்லர் என்று ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் மிகவும் வலிமையாக உள்ளது.

டெல்லி அணி
இன்று ஆடிய டெல்லி அணியில் பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், மார்க்ஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரான் ஹெட்மயர், அஸ்வின், அக்சர் பட்டேல், ஹர்சல் பட்டேல், ராபாடா, அன்ரிச் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

ஆடும் ராஜஸ்தான் அணி
இன்று ஆடும் ராஜஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. இன்று அணிக்குள் ஆண்ட்ரு டை, வருண் ஆரோன் ஆகியோர் இடம் பிடித்தனர்.ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஸ்மித், சஞ்சு சாம்சன், மஹிபால் லோமோர், ராகுல் திவாதியா, ஜோப்ரா ஆர்ச்சர் , ஆண்ட்ரு டை, ஷ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாகி, வருண் ஆரோன் ஆகியோர் விளையாடினார்கள்.

நிலைமை என்ன
இன்று முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி அதிரடி காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேவையில்லாத ரன் அவுட், தவறான கேட்ச் காரணமாக டெல்லி திணறியது. ஷ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களும், மார்க் ஸ்டோனிஸ் 39 ரன்களும் எடுத்தனர். கடைசியில் வந்த ஹெட்மயர் 45 ரன்களும், அக்சர் பட்டேல் 17 ரன்களும் (8 பந்தில்) அடித்து டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

பேட்டிங் எப்படி
இதனால் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தானுக்கு டெல்லி 185 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. ஜோஸ் பட்லர் விக்கெட்டை அஸ்வின் எடுக்க சீட்டு கட்டு போல வரிசையாக வீரர்கள் சரிந்து விழுந்தனர்.

ஜெய்ஷ்வால் எப்படி
ஒரு பக்கம் ஜெய்ஷ்வால் பொறுமையாக டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார். ஆனால் மற்ற வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்களுக்கு அவுட் ஆனார். சஞ்சு சாம்சன் இந்த முறையும் வெறும் 5 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வரிசையாக வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர். ஜெய்ஷ்வால் 36 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அவுட் ஆனார்
டெல்லி அணியில் அஸ்வின், அக்சர் பட்டேல், ஸ்டோனிஸ் என்று எல்லா வீரர்களும் நன்றாக பவுலிங் செய்தனர். இதையடுத்து 19.4 ஓவரில் ராஜஸ்தான் அனைத்து விக்கெட்டையும் இழந்து 138 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இதையடுத்து ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











