Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தனித்தனியாக பிளான் போட்டால்.. அவ்வளவுதான்.. ராயுடுவிற்கு அதிரடி செக் வைத்த தோனி.. பரபர பின்னணி

துபாய்: சிஎஸ்கே வீரர்கள் தனி தனி பிளானோடு ஆட வந்தால் அது அணியின் தோல்விக்குதான் வழி வகுக்கும் என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார். இவர் அம்பதி ராயுடுவை மறைமுகமாக எச்சரித்துள்ளார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்.

ஹைதராபாத்திற்கும் சென்னைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று துபாயில் நடக்கிறது. வரிசையாக தோல்விகளை தழுவி வரும் சிஎஸ்கே இன்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதுவரை நடந்த 7 போட்டிகளில் மொத்தம் 5 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்து உள்ளது. மீதம் உள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

சிஎஸ்கே மேட்ச்

சிஎஸ்கே மேட்ச்

கடந்த முறை பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. சேசிங்கின் போது சிஎஸ்கே செய்த மோசமான பேட்டிங் காரணமாக தோல்வி அடைந்தது. சிஎஸ்கேவின் தோல்வி குறித்து பேட்டி அளித்த தோனி, பவர்பிளேவில் போதுமான ரன்களை நாங்கள் எடுக்கவில்லை. இதனால் போக போக அழுத்தம் அதிகரித்தது.

பிளான் என்ன

பிளான் என்ன

வீரர்களுக்கு தனிப்பட்ட வகையில் ஊக்கம் அளிக்க முடியும். ஆனால் நாம் எவ்வளவு ஊக்கம் அளித்தாலும் சில விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. வீரர்கள் தனிப்பட்ட பிளானுடன் சமயங்களில் களமிறங்குவார்கள். வீரர்கள் தனிப்பட்ட வகையில் செயல்படுகிறார்கள். களத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு பிளான் வைத்து உள்ளனர். இங்குதான் நாங்கள் தோல்வி அடைகிறோம், என்று தோனி குறிப்பிட்டு இருந்தார்.

தவறு

தவறு

அதாவது சில வீரர்கள் வேறு பிளானுடன் வருகிறார்கள் என்று தோனி குறிப்பிட்டு இருந்தார். தோனி அம்பதி ராயுடுவதைதான் இப்படி தாக்கி பேசினார் என்று கூறுகிறார்கள். தொடர் தோல்விகளை தொடர்ந்து.. இனி மிடில் ஆர்டரில் வீரர்கள் அதிரடியாக ஆட வேண்டும். டெஸ்ட் இன்னிங்ஸ் ஆட கூடாது என்று தோனி குறிப்பிட்டு இருந்தார் . அதாவது மிடில் ஓவர்களில் மெதுவாக ஆட கூடாது என்று தோனி பிளான் போட்டு இருந்தார்.

ராயுடு என்ன செய்தார்

ராயுடு என்ன செய்தார்

ஆனால் தோனியின் பிளானை மீறி ராயுடு மிடில் ஓவர்களில் மிகவும் மெதுவாக ஆடினார். தோனி அதிரடியாக ஆட சொன்னார். ஆனால் ராயுடுவோ மெதுவாக ஆடினார். மிகவும் மெதுவாக பேட்டிங் செய்து டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார். இதுதான் சென்னையின் தோல்விக்கும் காரணமாக இருந்தது.

கிண்டல்

கிண்டல்

14 ஓவர்கள் பேட்டிங் செய்த ராயுடு 40 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிலும் சில சமயம் 2 ரன்கள் எடுக்க வாய்ப்பு இருந்தும் கூட சிங்கிள்தான் எடுத்தார். இதனால் ராயுடு இது போல இனி ஆட கூடாது என்று தோனி கண்டித்ததாக கூறுகிறார்கள். இதைத்தான் தோனி தனது பேச்சிலும் குறிப்பிட்டு இருந்தார். வேறு வேறு பிளானுடன் வீரர்கள் வந்ததால் தோல்வி அடைந்துவிட்டோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

தோனி கண்டிப்பு

தோனி கண்டிப்பு

அதாவது டீமில் இருக்கும் எல்லா வீரர்களும் ஒரே பிளானுடன் இருக்க வேண்டும். இனிமேல் மிடில் ஆர்டரில் இறக்கிவிட்டு டெஸ்ட் இன்னிங்ஸ் ஆட கூடாது என்று தோனி அதிரடியாக அறிவித்து உள்ளார். இதனால் இன்றைய போட்டியில் நன்றாக ஆட வேண்டிய கட்டாயத்தில் ராயுடு உள்ளார்.

Story first published: Wednesday, October 14, 2020, 13:22 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+