Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நாக்-அவுட்" என்றால் என்ன செய்வீர்கள்?.. தோனியின் அந்த கேள்வி.. டிரெஸ்ஸிங் ரூமில் பரபர சம்பவம்!

துபாய்: நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் சில சிஎஸ்கே வீரர்கள் மீது தோனி கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிஎஸ்கேவின் பேட்டிங் இந்த முறையும் மிக மோசமாக சொதப்பி உள்ளது. நேற்று 20 ஓவரில் ஹைதராபாத் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.

அதன்பின் இறங்கிய சென்னை 157 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. தோனி, ஜடேஜா மட்டுமே நேற்று சிஎஸ்கேவிற்காக கடைசி வரை போராடினார்கள்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்த போட்டிக்கு பின் சிஎஸ்கே டிரெஸ்ஸிங் ரூமில் சில முக்கியமான வீரர்களிடம் தோனி தனது கோபத்தை காட்டியதாக கூறுகிறார்கள். முக்கியமான சில வீரர்களிடம் தோனி கோபமாக கேள்விகளை எழுப்பி உள்ளார்;. நேற்று சிஎஸ்கேவில் சில வீரர்களின் ஆட்டம் தோனிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஓப்பனிங் எப்படி

ஓப்பனிங் எப்படி

முக்கியமாக ஓப்பனிங் இறங்கிய வாட்சன் மீது தோனி கடும் கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். வாட்சனுக்கு தோனி நிறைய முறை வாய்ப்பு கொடுத்துவிட்டார். ஆனாலும் வாட்ஸன் இந்த தொடரில் தன்னை நிரூபிக்கவில்லை. மிக முக்கியமான நேரத்தில் கூட இவர் சரியாக ஆட வில்லை. நேற்று வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் கூட வாட்சன் சரியாக ஆடாத காரணத்தால் தோனி கடுமையாக கோபம் அடைந்துள்ளார்.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

அதேபோல் நேற்று மிடில் ஆர்டரில் இறங்கி மோசமாக சொதப்பிய கேதார் ஜாதவ் மீது தோனி கடும் கோபத்தில் இருந்துள்ளார். இவர் கடந்த 16 போட்டிகளாக ஐபிஎல்லில் மிக மோசமாக ஆடி வருகிறார். கடந்த 16 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் கேதார் ஜாதவ் 30+ ரன்கள் அடித்துள்ளார் என்ற கோபத்தில் தோனி இருந்துள்ளார்.

கோபம்

கோபம்

அதேபோல் நேற்று 15 ஓவர்களுக்கு பின் போடப்பட்ட இரண்டு ஓவர்களில் அதிக ரன்கள் சென்றது. அதுவரை ஆட்டம் கையில் இருந்தாலும் அந்த இரண்டு ஓவரில் அதிக ரன்கள் சென்றதால் ஆட்டம் திசை மாறியது. இதுவும் தோனிக்கு கோபத்தை உண்டாக்கியது. அவ்வளவு கஷ்டப்பட்டும் இப்படி கடைசியில் சொதப்பிவிட்டதே என்று தோனி கோபம் அடைந்துள்ளார்.

கேள்வி எழுப்பினார்

கேள்வி எழுப்பினார்

இதை எல்லாம் விட சிஎஸ்கேவில் சில வீரர்கள் முக்கியமான கேட்ச்களை மிஸ் செய்ததும் தோனிக்கு கோபத்தை உண்டாக்கி உள்ளது. இதனால்தான் நேற்று டிரெஸ்ஸிங் ரூமில் தோனி சிஎஸ்கே வீரர்கள் சிலரிடம் கோபமாக பேசி உள்ளார். இப்படி கேட்ச் விட்டால் என்ன நியாயம், இன்னும் எத்தனை நாட்களுக்கு கேட்ச் விடுவதற்கு ''லைட்டிங்கை'' குறை சொல்வீர்கள் என்று கேட்டுள்ளார் .

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

அதேபோல் மிடில் ஆர்டரில் இறங்கிய சில வீரர்களிடம், இப்படி பொறுப்பில்லாமல் ஆடினால் எப்படி. 6 நாட்கள் பயிற்சி எடுத்தது இதற்குத்தானா? இதுவே நாக் அவுட் போட்டியாக இருந்து, நாம் வெளியேறி இருந்தால் என்ன செய்வீர்கள் என்று மிக கடுமையாக கேள்விகளை எழுப்பி உள்ளார். அடுத்த சிஎஸ்கே போட்டிக்கு முன்பாக இதனால் அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Saturday, October 3, 2020, 14:04 [IST]
Other articles published on Oct 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+