Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரைம்-டைம் முடிந்துவிட்டது.. தோனி செய்த பெரிய தவறு.. ஆடிப்போன சிஎஸ்கே.. இனி இவர்தான் புது பினிஷர்!

துபாய்: டெல்லி அணிக்கு எதிராக நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் தோனியின் மோசமான பேட்டிங் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இன்று டெல்லிக்கு சிஎஸ்கேவிற்கும் இடையில் சார்ஜாவில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சிஸ்கே முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

சார்ஜா பிட்ச் பேட்டிங் செய்ய எளிதாக இருக்கும் என்பதாலும் போக போக பிட்ச் சேசிங் செய்ய கஷ்டமாக என்பதாலும் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். சிஎஸ்கே தொடக்கத்தில் கொஞ்சம் சொதப்பினாலும் போக போக வேகம் எடுத்தது.

எப்படி ஆடியது

எப்படி ஆடியது

முதலில் சிஎஸ்கேவிற்காக ஓப்பனிங் இறங்கிய சாம் கரன் மோசமான ஷாட் அடித்து டக் அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய வாட்சன், டு பிளசிஸ் இருவரும் தொடக்கத்தில் மெதுவாக ஆடினாலும் போக போக வேகம் எடுத்தனர். டு பிளசிஸ் மொத்தமாக 47 பந்தில் 58 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் வாட்சன் 28 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்.

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

வாட்சன், டு பிளசிஸ் இருவரும் தொடக்கத்தில் சரியாக ஆடவில்லை என்றாலும் போக போக வேகம் எடுத்தனர். இரண்டு பேருமே அதிரடி காட்டிய பின் வாட்சன் அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய ராயுடுவும் மாஸ் ஆட்டம் ஆடினார். 25 பந்துகள் பிடித்த ராயுடு 45 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ் 1 பவுண்டரி அடக்கம்.

எப்படி

எப்படி

இன்றும் தோனியின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. களத்திற்கு வந்த தோனி பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை. தோனியிடம் இருந்த பழைய வேகம் இப்போது இல்லை என்று பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இன்று தோனி இன்னும் ஒரு படி மேலே போய் பந்தை கணிக்க கூட முடியாமல் கஷ்டப்பட்டார்.

கணிக்க முடியவில்லை

கணிக்க முடியவில்லை

பந்து வரும் வேகத்தையும் கணிக்க முடியவில்லை. பந்தை பார்த்ததும் தோனியால் ஆட முடியவில்லை. கடந்த இரண்டு போட்டியிலும் தோனி பந்தின் வேகத்தை கணிக்க முடியாமல்தான் அவுட் ஆனார். இன்றைய போட்டியிலும் இதேபோல்தான் அவுட்டானார். உலக்க கோப்பை தொடரின் போது தோனியின் பேட்டிங் இருந்த வேகத்தை விட இந்த முறை மிகவும் மோசமாக இருந்தது.

இல்லை

இல்லை

தோனியிடம் இருந்த பழைய துல்லியம், பவர், அழுத்தம் எதுவும் அவரிடம் இந்த சீசனில் காணப்படவில்லை. இப்படி பார்ம் இன்றி தவிக்கும் தோனி 5வது பேட்ஸ்மேனாக களமிறங்குவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. தோனி எடுத்த இந்த தவறான முடிவுதான் சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பார்மில் இல்லாதவர் ஏன் டாப் ஆர்டரில் இறங்க வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது.

பினிஷர்

பினிஷர்

சிஎஸ்கேவில் தோனியை விட தற்போது ஜடேஜாதான் சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். அவர்தான் டாப் ஆர்டரில் இறங்க வேண்டும். ஜடேஜா கடந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினார். இந்த போட்டியிலும் வெறும் 13 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். நோர்ட்ஜ், ரபாடா என்று உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை எதிர்கொண்டார். இதனால் சிஎஸ்கேவின் புதிய பினிஷர் இனி ஜடேஜாதான், தோனி கிடையாது என்று சிஎஸ்கே ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Saturday, October 17, 2020, 22:43 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+