Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோஹித் எல்லாம் அப்படி ஓரமா ஒதுங்குங்க.. தோனி தான் இப்பவும் கிங்.. வெளியான தகவல்!

மும்பை : ஐபிஎல் தொடர் மூலம் அதிகம் சம்பாதித்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதில் தோனி தான் முதல் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட தோனி அதிகம் சம்பாதித்துள்ளார்.

இந்த தகவல் தோனி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது. அவர்கள் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

தோனி மவுசு

தோனி மவுசு

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெற்று விட்டார். இன்னும் ஓராண்டில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்தும் கூட ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. ஆனாலும், அவரது மவுசு எங்கேயும் குறைந்ததாக தெரியவில்லை. இன்னும் சமூக வலைதளங்களில் தோனி முதல் இடத்தில் வலம் வருகிறார்.

தோனி முதல் இடம்

தோனி முதல் இடம்

அவர் 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார். அவர் அப்போது முதல் 2020 வரை ஐபிஎல் தொடரில் சம்பளமாக 137 கோடி சம்பாதித்துள்ளார். இதில் இடையே இரண்டு ஆண்டுகள் அவர் புனே அணிக்காக ஆடிய போது பெற்ற சம்பளமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா 2008 முதல் 2010 வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலும், அதன் பின் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் ஆடி வருகிறார். அவர் இதுவரை ஐபிஎல் தொடரில் சம்பளமாக 131 கோடி பெற்றுள்ளார். தோனிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் ரோஹித்.

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி 2008 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார். அவர் ஐபிஎல் தொடரில் சம்பளமாக 126 கோடி ஈட்டி இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். கோலி முதல் மூன்று ஐபிஎல் சீசன்களில் 12 லட்சம் மட்டுமே சம்பளம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலி சம்பளம்

கோலி சம்பளம்

இந்தப் பட்டியலில் தோனி, ரோஹித் முதல் இரண்டு இடங்களில் இருந்தாலும், தற்போது அதிக சம்பளம் பெறுபவர்களில் அவர்களை விட முன்னணியில் இருக்கிறார். விராட் கோலி 17 கோடியும், ரோஹித், கோலி இருவரும் 15 கோடியும் சம்பளம் பெற்று வருகின்றனர்.

Story first published: Thursday, December 10, 2020, 19:21 [IST]
Other articles published on Dec 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+