
ஆதிக்கம் எப்படி
போட்டியின் தொடக்கத்தில் கொல்கத்தா ஆதிக்கம் செலுத்துவது போல இருந்தாலும் போக போக சிஎஸ்கே ஆட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. முக்கியமாக பவுலர்களுக்கு தோனி மாற்றி மாற்றி ஓவர் கொடுத்தார். இதனால் போக போக ஆட்டம் சிஎஸ்கே அணியின் கைவசம் வந்தது.

சிஎஸ்கே பவுலர்கள்
கொல்கத்தா அணி 180 + ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசியில் இந்த போட்டியில் சிஎஸ்கே பவுலர்கள் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இன்றைய போட்டியில் இவர் 4 கேட்ச் பிடித்தார். அதோடு ஒரு ரன் அவுட் செய்தார்.

4 கேட்ச் பிடித்தார்
இன்றைய போட்டியில் சுப்மான் கில், மாவி, ரசல், மார்கன் ஆகிய 4 முக்கியமான வீரர்களின் விக்கெட்டை தோனிதான் கேட்ச் பிடித்து எடுத்தார். அதிலும் மாவி விக்கெட்டை கடைசி ஓவரில் தோனி எடுத்தார். கீப்பர் இடத்தில் இருந்து இரண்டாவது ஸ்லிப் தாண்டி, மூன்றாவது ஸ்லிப் சென்று தோனி பறந்து பிடித்த கேட்ச் இணையத்தை புரட்டி போட்டுள்ளது.

சாதனை
இந்த போட்டியில் தோனி பிடித்த 4 கேட்ச்கள் மூலம் இன்று புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 104 கேட்சுகளை பிடித்து ஐபிஎல் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். இதற்கு முன் தினேஷ் கார்த்திக் 103 கேட்ச்கள் பிடித்து இந்த சாதனையை தன் கைவசம் வைத்து இருந்தார். அதை தோனி முறியடித்தார்.

அடுத்த பால்
அதன்பின் சிஎஸ்கே பேட்டிங் செய்த போது டு பிளசிஸ் விக்கெட்டை ஷிவம் மாவி எடுத்தார். இந்த கேட்சையும் தினேஷ் கார்த்திக்தான் பிடித்தார். இதன் மூலம் தற்போது தினேஷ் கார்த்திக், தோனி இருவரும் 104 கேட்ச்களை பிடித்து அதிக கேட்ச் பிடித்த கீப்பர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications