Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொண்டை வறண்டு போனது.. இருமல் வந்தது.. நேற்று இரவு திணறியது ஏன்?.. தோனி அளித்த பரபரப்பு விளக்கம்!

துபாய்: நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தனக்கு உடல் ரீதியாக என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பது குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று சென்னைக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் துபாயில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆட்டத்தை முதலில் சென்னை கட்டுப்படுத்திய நிலையில், போக போக சொதப்பியது. இந்த முறையும் சென்னையின் பேட்டிங் மிக மோசமாக சொதப்பியது.

20 ஓவரில் ஹைதராபாத் நேற்று 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய சென்னை கடைசி வரை போராடி 157 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

நேற்று போட்டியில் ஜடேஜா மட்டும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார். இன்னொரு பக்கம் தோனி சரியாக ஷாட் அடிக்க முடியாமல் கடுமையாக கஷ்டப்பட்டார். நேற்று தோனியால் கடைசி இரண்டு ஓவரில் சரியாக மூச்சு கூட விட முடியவில்லை.

பாதியில் வந்த மருத்துவர்

பாதியில் வந்த மருத்துவர்

இதனால் நேற்று தோனிக்கு உதவி செய்ய பாதியில் மருத்துவரும் களத்திற்கு வந்தார். தோனி மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டார். துபாயில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக அவரால் களத்தில் நிற்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று என்ன நடந்தது என்பது குறித்து தோனியே விளக்கி உள்ளார்.

தோனி பேச்சு

தோனி பேச்சு

தோனி தனது பேச்சில், போட்டியின் பாதியில் என்னால் நிறைய பந்துகளை அடிக்க முடியவில்லை. பந்துகளை அடிக்க வேண்டும் என்று மிக கடுமையாக முயற்சி செய்தேன். டைமிங் சரியில்லை. நேரம் செல்ல செல்ல பிட்ச் ஸ்லோ பால் செய்ய வசதியாக மாறியது. இதனால் இதில் அதிரடி ஷாட் அடிக்க முடியவில்லை.

பேட்டிங்

பேட்டிங்

பந்துகளை வேகமாக, இழுத்து அடிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ஸ்லோ பால் காரணமாக பந்துகள் சரியாக பேட்டில் சிக்கவில்லை. முடிந்தவரை பந்துகளை அடிக்க கடுமையாக முயற்சி செய்தேன்.

வறட்சி ஏன்?

வறட்சி ஏன்?

இங்கு பிட்ச் மிகவும் வறட்சியாக இருக்கிறது. அதேபோல் வெப்பநிலையும் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் இருமல் ஏற்பட்டது . தொண்டை வறண்டு போனது. போக போக இருமல் வந்து கஷ்டமாக இருந்தது. இது போன்ற அறிகுறிகள் வந்தால் போட்டிக்கு இடையே ஓய்வு எடுக்கலாம். இதனால்தான் பேட்டிங் செய்ய சிரமமாக இருந்தது என்று தோனி குறிப்பிட்டார்.

துபாய் பிட்ச்

துபாய் பிட்ச்

அமீரகத்தில் தற்போது வெப்பநிலை அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு விளையாடும் வீரர்கள் மிக கடுமையாக நீர் இழப்பு காரணமாக கஷ்டப்படுகிறார்கள். முக்கியமாக மூத்த வீரர்கள் மிக மோசமாக கஷ்டப்படுகிறார்கள்.இதனால் தான் நேற்று தோனியும் மிக கடுமையாக திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 3, 2020, 8:44 [IST]
Other articles published on Oct 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+