
என்ன நடந்தது
இந்த நிலையில் சிஎஸ்கே சார்பாக இன்று சாம் கரன் ஓப்பனிங் இறங்கினார். தான் ஓப்பனிங் இறக்கப்பட்டதற்கான நியாயத்தை சாம் கரன் கச்சிதமாக செய்தார். 21 பந்துகள் பிடித்த சாம் கரண் 31 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம். அதிலும் கலீல் ஓவரில் ஓவர் பந்துகளை பறக்கவிட்டு பெரிய நம்பிக்கை அளித்தார்.

வேறு என்ன
அதன்பின் பேட்டிங் இறங்கிய வாட்சன், ராயுடு இருவரும் மாஸ் ஆட்டம் ஆடினார்கள். 38 பந்துகள் பிடித்த வாட்சன் 42 ரன்கள் எடுத்தார். இவர் மூன்று சிக்ஸ் அடித்தார். அதேபோல் இன்னொரு பக்கம் 2 சிக்ஸ், 3 பவுண்டரியுடன் 34 பந்தில் ராயுடு 41 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் தோனி 13 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 10 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்..இதனால் சிஎஸ்கே 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது.

எப்படி நடந்தது
இதன்பின் களமிறங்கிய ஹைதராபாத் மோசமாக திணறியது. அதிலும் முதல் பவர்பிளேவில் அதிரடியாக ஆட முடியாமல் ஹைதராபாத் கடுமையாக திணறியது. 4வது ஓவரிலேயே டேவிட் வார்னர், மனிஷ் பாண்டே இருவரும் அவுட்டானார்கள். அதன்பின் 10வது ஓவரில் ஜானி பிரைஸ்டோ அவுட்டானார். சாம் கரன் போட்ட 4வது ஓவரும், ஜடேஜா போட்ட 10வ து ஓவரும் ஆட்டத்தை மாற்றியது.

ஆனால் என்ன
ஆனால் இன்னொரு பக்கம் கேன் வில்லியம்சன் களத்தில் உறுதியாக நின்றார். பிரியம் கார்க் அவுட் ஆன பின்பும் கூட கேன் வில்லியம்சன் களத்தில் நின்றார். இங்குதான் தோனி ஓவரில் மாற்றம் செய்தார். 15வது ஓவர் வரை தோனி பியூஸ் சாவ்லாவிற்கு ஓவர் கொடுக்கவில்லை. 16வது ஓவர்தான் சாவ்லா ஓவர் போடவே வந்தார். இது பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது.

தினேஷ் கார்த்திக்
சென்னைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் இதேபோல்தான் செய்தார். அப்போது சிஎஸ்கே 160+ ஸ்கோரைதான் சேஸிங் செய்தது. அப்போதும் தினேஷ் கார்த்திக் ரசல் மற்றும் நரேனுக்கு ஓவர் கொடுக்கவே இல்லை. 13 ஓவருக்கு பின்தான் இருவரும் ஓவர் போட வந்தனர். ஒருவர் ஸ்லோ பால் போட்டார், இன்னொருவர் ஸ்பின் போட்டார். இவர்களை சமாளிக்க முடியாமல் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

அதே பிளான்
தினேஷ் கார்த்திக் போட்ட அதே பிளானை இன்று தோனியும் களமிறக்கினார். 15 ஓவருக்கு பின் சாவ்லா, பிராவோ, கரன் சர்மா மட்டுமே பவுலிங் செய்தனர். இதில் கரண் சர்மா ஓவரில் சிஎஸ்கேவை அச்சுறுத்தி வந்த கேன் வில்லியம்சன் அவுட்டானார். ஆனால் அதன்பின் ரஷீத் கான் அடுத்தடுத்து சிக்ஸ் பவுண்டரி அடித்து ஆட்டத்தை மாற்றினார். அதிலும் 18வது ஓவரில் ஹைதராபாத் 19 ரன்கள் எடுத்தது.

என்ன ஆனது
இந்த நிலையில் ரன் செல்கிறது என்று தெரிந்ததும் ஷரத்துல் தாக்கூருக்கு தோனி ஓவர் கொடுத்தார். அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சென்றது. ரஷீத் கானும் அந்த ஓவரில் அவுட்டானார். கடைசி ஓவரில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் பிராவோ ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே சென்று 1 விக்கெட் விழுந்த நிலையில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


Click it and Unblock the Notifications