ஏன் நிற்கவில்லை? நேற்று ஷர்துல் செய்த சம்பவம்.. வேகமாக சென்று பேசிய தோனி.. களத்தில் என்ன நடந்தது?
துபாய்: நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி ஷர்துல் தாகூருக்கு கூறிய அறிவுரை பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
நேற்று ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெற்றது. சிஎஸ்கே பவுலர்கள்,பேட்ஸ்மேன்கள் எல்லோரும் சிறப்பாக ஆடிய நிலையில் மொத்தமாக ஆட்டத்தை கைப்பற்றி சிஎஸ்கே நேற்று வெற்றிபெற்றது.
முதலில் ஆடிய சிஎஸ்கே 167 ரன்கள் எடுக்க, அதன்பின் ஆடிய ஹைதராபாத் 147 ரன்கள் எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் சிஎஸ்கேவின் பிளே ஆப் கனவு இன்னும் கலையாமல் உயிர்ப்புடன் இருக்கிறது.

என்ன நடந்தது
நேற்று சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் முதலில் ஹைதராபாத் அணி மோசமாக திணறினாலும் போக போக அதிரடி காட்ட தொடங்கியது. அதிலும் 15-18 ஓவர்களில் ஹைதராபாத் அணி அதிரடியாக ஆடியது. ஹைதராபாத் அணியின் ரஷீத் கான், கேன் வில்லியம்சன் இருவரும் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடினார்கள்.

18வது ஓவர்
இந்த நிலையில் கேன் வில்லியம்சன் விக்கெட்டை எடுப்பதற்காக நேற்று கரன் சர்மாவிற்கு தோனி ஓவர் கொடுத்தார். 18வது ஓவரை கரன் சர்மா வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி சென்றாலும் அடுத்த பந்திலேயே கேன் வில்லியம்சன் அவுட்டானார். இதனால் ஆட்டம் மொத்தமாக மாறியது.

அடுத்து நடந்த சம்பவம்
ஆனால் அடுத்து ஸ்டிரைக் எடுத்த ரஷீத் கான் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர்களை அடித்தார். கரன் சர்மா வீசிய மூன்றாவது பந்தை ரஷீத் கான் கவர் திசையில் அடித்தார். இந்த பந்து அங்கு நின்று கொண்டு இருந்த ஷர்துல் தாக்கூர் கையில் பட்டு பறந்து சிக்ஸ் சென்றது. சரத்துல் தாக்கூர் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் சிக்ஸ் சென்று இருக்காது. ஆனால் இவர் கவனக்குறைவால் கேட்சை விட்டுவிட்டார்.

கேள்வி கேட்டார்
ஷர்துல் தாக்கூர் கேட்சை விட்டதும் அவரிடம் சென்ற தோனி, நீ ஏன் அந்த இடத்தில் நிற்கவில்லை என்று போல கேள்வி கேட்டார். சரத்துல் தாக்கூர் கவர் திசையில் ஒரே இடத்தில் நிற்காமல் அங்கும், இங்கும் நகர்ந்து கொண்டு இருந்தார். இதனால்தான் ரஷீத் கான் அடித்த பந்தை சரியாக அவரால் கேட்ச் பிடிக்க முடியவில்லை. இதை பார்த்து டென்ஷன் ஆன தோனி, தாக்கூரிடம் சென்று நேற்று கோபமாக அறிவுரை வழங்கினார்.


Click it and Unblock the Notifications