பிராவோவோடு வாக்குவாதம்.. கிளவுஸை கழற்றிவிட்டு.. தோனி கொடுத்த சிக்னல்.. கடைசி ஓவரில் பரபர சம்பவம்!
துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் சிஎஸ்கே கேப்டன் தோனி வகுத்த வியூகம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
சிஎஸ்கேவிற்கும் கொல்கத்தாவிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போட்டியின் தொடக்கத்தில் கொல்கத்தா ஆதிக்கம் செலுத்துவது போல இருந்தாலும் போக போக சிஎஸ்கே ஆட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் சிஎஸ்கே பவுலிங் செய்தது.

பவுலிங் எப்படி
சிஎஸ்கேவின் பவுலிங் இன்று தொடக்கத்தில் பெரிய அளவில் சரியாக இல்லை. முக்கியமாக சாகர் பவுலிங் இன்று மோசமாக இருந்தது. சரியான லென்தில் போட முடியாமல், அதேபோல் சரியாக ஸ்விங் செய்ய முடியாமல் சாகர் திணறினார். ஆனால் போக போக சிஎஸ்கேவின் மற்ற பவுலர்கள் நன்றாக பந்து வீசி விக்கெட் எடுத்தனர்.

விக்கெட் எடுத்தனர்
முக்கியமாக இன்று சிஎஸ்கே அணிக்காக ஆடிய கரன் சர்மா வெறும் 25 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் எடுத்தார். அதன்பின் சர்த்துல் தாக்கூரும் மிக துல்லியமான லென்தில் பவுலிங் செய்து 2 விக்கெட் எடுத்தார். கடைசி கட்டத்தில் சாம் கரனும் சரியாக பவுலிங் செய்து 2 விக்கெட் எடுத்தார். அதோடு இவரின் 19வது ஓவரும் சிறப்பாக அமைந்தது.

கடைசி ஓவர்
இந்த நிலையில் கடைசி ஓவரை பர்த் டே பாய் பிராவோ போட வந்தார். அப்போது தோனிக்கும், பிராவோவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிராவோ அட்டாக்கிங் பந்துகளை வீச வேண்டும், விக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதற்கு தோனி பவுன்சர், யார்க்கர் பந்துகளை வீச வேண்டாம் என்றுள்ளார்.

வாக்குவாதம்
அகலமான பந்துகளை வீச வேண்டும். அதிலேயே விக்கெட் விழும் என்று பிராவோவிடம் குறிப்பிட்டுள்ளார்.. இவர்கள் இருவரும் சில நிமிடம் வாக்குவாதம் செய்தனர். அந்த ஓவரில் வரிசையாக அகலமான லென்தில் பிராவோ பந்து வீசினார். சரியாக 2வது பந்திலேயே நாகர்கோட்டி டு பிளசிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பேட்டிங்
அதற்கு அடுத்து 5வது பந்து போடுவதற்கு முன் பிராவோவிடம் ஆப் சைட் திசையில் பந்து போடும்படி கையால் சிக்னல் காட்டினார். அதே நொடியில் தோனி தனது கிளவுஸையும் கழற்றிவிட்டார். அந்த பந்தை பிராவோ அதேபோல் வீசினார். சரியாக தோனி நினைத்து போல பேட்ஸ்மேன் மாவி கேட்ச் கொடுத்தார்.

கேட்ச்
2வது ஸ்லிப் இருக்கும் இடத்திற்கு சென்ற பந்தை தோனி சிறுத்தை போல பாய்ந்து சென்று, ஒரு கையில் கிளவுஸ் இல்லாமலே பிடித்தார். அடுத்த பந்திலும் சக்கரவர்த்தியை தோனி ரன் அவுட் செய்தார். கையில் கழற்றி இருந்த கிளவுஸை ஒரு நொடியில் மாட்டி, துல்லியமாக ரன் அவுட் செய்தார்.

பிளான்
தோனி போட்ட இந்த பிளான் கடைசியில் கொல்கத்தாவின் ரன் ரேட்டை பாதாளத்திற்கு தள்ளியது. இதனால் கொல்கத்தா 20 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.


Click it and Unblock the Notifications