Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி எதுவும் இல்லை.. "டெஸ்ட்" செய்யும் தோனி.. மொத்தமாக உருமாறுகிறது சிஎஸ்கே அணி.. எல்லாம் முடிந்தது!

துபாய்: ஐபிஎல் தொடரில் அடுத்து நடக்கும் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்குள் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. அணியில் ஓப்பனிங் தொடங்கி மிடில் ஆர்டர் வரை பல விஷயங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மிக மோசமாக சொதப்பி வருகிறது. முதலில் மும்பையை வீழ்த்தி வெற்றியோடுதான் இந்த சீசனை சிஎஸ்கே தொடங்கியது.

ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் சிஎஸ்கே எதிர்பாராத வகையில் தொடர் தோல்விகளை சந்தித்தது. டெல்லி, ராஜஸ்தான், ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர் என்று அடுத்தடுத்து முக்கியமான போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே மோசமாக மண்ணை கவ்வியது.

தோல்வி

தோல்வி

தொடர் தோல்விகள் காரணமாக தற்போது சிஎஸ்கே துவண்டு போய் உள்ளது. இதன் காரணமாக இந்த சீசனில் சிஎஸ்கே பிளே ஆப் செல்வதே சந்தேகம் ஆகியுள்ளது. சிஎஸ்கே அணிக்குள் இருக்கும் வயதான வீரர்கள் எல்லோரும் பார்ம் அவுட்டில் இருக்கிறார்கள். ஒரு போட்டியில் ஆடினால் அடுத்த போட்டியில் ஆட முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் திணறுகிறார்கள்.

ஒப்புக்கொண்டார்

ஒப்புக்கொண்டார்

இதை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியே கடந்த போட்டியில் ஒப்புக்கொண்டு விட்டார். அணியில் மூத்த வீரர்கள் சரியாக ஆடவில்லை. அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் சரியாக ஆடவில்லை. அதேபோல் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை. இதனால் அவர்களை அணியில் எடுக்கவில்லை என்று தோனி குறிப்பிட்டு இருந்தார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அதோடு தொடர் தோல்விகள் காரணமாக ஒரே நல்ல விஷயம் நடந்துள்ளது. அணிக்குள் இனி இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியும், இனி வெற்றி தோல்வி என்ற பிரஷர் இல்லாமல் சிஎஸ்கே ஆட முடியும். அதனால் இளைஞர்களை அணியில் எடுக்க முடியும் என்று தோனி கூறினார். அதாவது இளைஞர்களை வைத்து சோதனை செய்ய முடியும் என்று தோனி கூறினார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

ஆம் சிஎஸ்கே இனி நடக்கும் போட்டிகளில் எல்லாம் அணியில் இளைஞர்களை எடுத்து சோதனை செய்ய போகிறது. இனி நடக்கும் போட்டிகளில் வென்றாலும் பெரிய அளவில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பு இல்லை. இதை தோனியே கடந்த போட்டியில் சூசகமாக ஒப்புக்கொண்டுவிட்டார். இதன் காரணமாக இனி வரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி மொத்தமாக புதிய, புதிய வீரர்களுடன் களமிறங்கும் என்று கூறுகிறார்கள்.

புதிய அணி

புதிய அணி

அதன்படி சிஎஸ்கேவில் இனி வரும் போட்டிகளில் ஜெகதீசன், சாம் கரன் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது. வாட்சன், டு பிளசிஸ் அதற்கு பின் இறங்குவார்கள். ராயுடு, தோனி அதன்பின் இறங்குவார்கள். அதேபோல் ஜாதவ் அணியில் இருந்து நீக்கப்படுவார். பிராவோ இருந்த இடத்தில் ஹசல்வுட்டிற்கு பதிலாக இம்ரான் தாஹிர் இறங்குவார் என்று கூறுகிறார்கள்.

ஓப்பனிங்

ஓப்பனிங்

இதன் காரணமாக சிஎஸ்கே அணியில் ஓப்பனிங், மிடில் ஆர்டர் என்று எல்லாம் மொத்தமாக மாற்றம் அடையும் என்று கூறுகிறார்கள். அடுத்தடுத்த போட்டிகளில் அணியில் முக்கியமான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

மாற்றம்

மாற்றம்

பியூஸ் சாவ்லாவிற்கு பதிலாக அணியில் மோனு குமார், ஆசிப் போன்ற வீரர்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்... தொடர் முடிய உள்ள காரணத்தால் இளம் வீரர்களை வைத்து தோனி டெஸ்ட் செய்ய போகிறார் என்கிறார்கள். சிஎஸ்கேவின் எதிர்காலத்தை இதுதான் தீர்மானிக்கும் என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, October 21, 2020, 10:06 [IST]
Other articles published on Oct 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+