Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த தமிழக ஸ்பின் பவுலரா?.. ரிஸ்க் எடுக்க முடியாது.. ஒரே அடியாக மறுத்த கேப்டன் தோனி.. திடீர் முடிவு!

துபாய்: சிஎஸ்கே அணியில் தமிழக ஸ்பின் பவுலர் ஒருவரை ஆட வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழ தொடங்கி உள்ளது. ஆனால் இதற்கு தோனி மறுத்துவிட்டதாக கூறுகிறார்கள்.

சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடக்க உள்ளது. இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த காரணத்தால் இன்று நடக்கும் போட்டி சிஎஸ்கேவிற்கு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஹைதராபாத் அணியும் கடந்த போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.ஹைதராபாத் பவுலர்கள் இப்போதுதான் பார்மிற்கு திரும்பி உள்ளனர்.

ஸ்பின்

ஸ்பின்

சென்னை அணிக்கு எல்லா ஐபிஎல் தொடரிலும் ஸ்பின் பவுலிங்தான் கை கொடுக்கும். எப்போதும் ஜடேஜா, இம்ரான் தாஹிர் போன்ற ஸ்பின் பவுலர்கள்தான் சென்னை அணிக்கு அதிக விக்கெட் எடுப்பார்கள். ஆனால் இந்த முறை சென்னை அணிக்கு ஸ்பின் பவுலிங் கை கொடுக்கவில்லை.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இந்த முறை அணியில் ஆடும் பியூஸ் சாவ்லா சரியாக பவுலிங் செய்வது இல்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இவர் விக்கெட் எடுத்தாலும், ரன்களை வாரி வழங்குகிறார். இதனால் இவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அணியில் ஏற்கனவே நான்கு வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.

வர மாட்டார்

வர மாட்டார்

நான்கு வெளிநாட்டு வீரர்கள் உள்ள காரணத்தால், அணியில் இம்ரான் தாஹிரை எடுக்க முடியாது. இதனால் பியூஸ் சாவ்லாவிற்கு பதில் அவரின் இடத்தில் உள்ளூர் வீரரான சாய் கிஷோரை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. 23 வயதாகும் சாய் கிஷோர் சென்னையை சேர்ந்தவர். இவர் லெப்ட் ஹேண்ட் ஆர்தடாக்ஸ் ஸ்பின் பவுலர்.

பேட்டிங்

பேட்டிங்

அதேபோல் இவர் லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன். இவரை பியூஸ் சாவலாவிற்கு பதில் அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இவர் தமிழக அணிக்காக ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் ஆடி இருக்கிறார். சிஎஸ்கே அணியின் கவனத்தை ஈர்த்த இவர் 2020ல் ஏலம் எடுக்கப்பட்டார். பலரும் இவருக்கு ஆதரவாக கோரிக்கைகள் வைத்து வந்தனர். தமிழகத்தின் ஸ்பின் பவுலர்களில் இவர் அதிகம் கவனம் ஈர்த்து வருகிறார்கள். இந்திய அணியில் எதிர்காலத்தில் இவர் இணையவும் வாய்ப்புள்ளது .

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இவரை அணியில் எடுக்க தோனி விரும்பவில்லை என்கிறார்கள். வலை பயிற்சியில் இவரின் ஸ்பின் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. பியூஸ் சாவ்லா ரன் கொடுத்தாலும் விக்கெட் எடுக்கிறார். அதனால் அவரை நீக்கும் எண்ணம் தோனிக்கு இல்லை. சாய் கிஷோரை எடுப்பது பெரிய ரிஸ்க் என்று தோனி நினைப்பதாக கூறுகிறார்கள். இதனால் இந்த சீசன் முழுக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Friday, October 2, 2020, 16:01 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+