எவ்வளவு நெகிழ்ந்து இருப்பார்.. மேட்சிற்கு பின் நடராஜனை சந்தித்த தோனி..அடுத்து நடந்த சுவாரசிய சம்பவம்
துபாய்: நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின் தமிழக வீரர் நடராஜனை கேப்டன் தோனி நேரில் சென்று சந்தித்த சம்பவம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அதிரடியாக வெற்றிபெற்றது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்திலும் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டது.
முதலில் ஆடிய சிஎஸ்கே 167 ரன்கள் எடுக்க, அதன்பின் ஆடிய ஹைதராபாத் 147 ரன்கள் எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடர் தோல்விகளை சந்தித்த சிஎஸ்கேவிற்கு இந்த வெற்றி ஊக்கம் அளித்துள்ளது.

பவுலிங் நன்றாக இருந்தது
நேற்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஒரு பக்கம் சிறப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஹைதராபாத் அணியின் பவுலிங்கும் மிகவும் சிறப்பாகவே இருந்தது. முக்கியமாக தமிழக வீரர் நடராஜன் போட்ட ஓவர்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் இந்த சீசனில் பெரிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

யார்க்கர் கிங்
முக்கியமாக யார்க்கர் கிங் என்று பெயர் பெற்று இருக்கும் நடராஜன் 6 பாலும் யார்க்கர் போடுவதில் வல்லவராக இருக்கிறார். இவர் 145+ வேகத்தில் அசால்ட்டாக யார்க்கர் போடுவதை பார்த்து ப்ரிட்லீ போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் மிரண்டு போய் உள்ளனர். நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனியின் விக்கெட்டை இவர்தான் எடுத்தார்.

நடராஜன் வீசினார்
தனது கடைசி ஓவரை வீச நடராஜன் களத்திற்கு வந்தார். அந்த ஓவரின் 5வது பந்தில் தோனி 102 மீட்டர் சிக்ஸர் ஒன்றை அடித்தார்.இந்த நிலையில் அடுத்த பந்தே தோனிக்கு நடராஜன் லோ புல் டாஸ் போட்டார். இதை கணிக்க முடியாமல் இழுத்து அடித்த தோனி, கவர் திசையில் இருந்த கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அஸ்வின் எப்படி
சில நாட்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு பேட்டி அளித்து இருந்த நடராஜன்.. தோனியின் விக்கெட்டை எடுப்பதுதான் என்னுடைய கனவு. அதை நான் சாதனையாக கருதுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் சொன்னது போலவே நேற்று தோனியின் விக்கெட்டை சரியாக எடுத்தார் . தனது கனவு விக்கெட்டை நடராஜன் நேற்று எடுத்தார்.

என்ன சொன்னார்
இந்த நிலையில் நேற்று மேட்ச் முடிந்த பின் நடராஜனை தோனி நேரில் சந்தித்தார். போட்டிக்கு பின்பாக நடராஜனை சென்று தோனி சந்தித்து அவரிடம் பேசினார். நீண்ட நேரம் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டனர் . இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. நடராஜன் தோனியின் மிகப்பெரிய ரசிகர். இவரிடம் தோனியே நேரில் சென்று பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சந்தித்தார்
அதிலும் போட்டி முடிந்த பின் நடராஜனுக்கு தோனி ஹை பை கொடுத்தார். இதை பலரும் பாராட்டி உள்ளனர். தன்னுடைய ரசிகரான இளம் வீரரை பார்த்து அவருக்கு தோனி ஊக்கம் அளித்துள்ளார்... உண்மையில் தோனி உயர்ந்த மனிதன்தான் என்று அவரை பலரும் பாராட்டி உள்ளனர்.


Click it and Unblock the Notifications