Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. சாம் கரனை ஓப்பனிங் அனுப்பிய தோனி.. பக்கா பிளான்.. இதுதான் காரணம்?

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சாம் கரன் களமிறங்கி உள்ளார்.

சென்னை அணி 2020 ஐபிஎல் போட்டியில் 7 போட்டிகளில் இதுவரை 5 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் சிஸ்கே 6 போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியிலும் வெல்ல வேண்டிய கட்டாயம் சிஎஸ்கேவிற்கு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தற்போது துபாயில் நடந்து வருகிறது.

டாஸ் வென்றது

டாஸ் வென்றது

இந்த நிலையில் இன்றைய போட்டியில் சிஎஸ்கே டாஸ் வென்றது. முதல் முறையாக டாஸ் வென்ற தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.இந்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவில் இருந்து என் ஜெகதீசன் நீக்கப்பட்டுள்ளார். ஜெகதீசனுக்கு பதிலாக பியூஸ் சாவ்லா சேர்க்கப்பட்டுள்ளார்.

மாற்றம் எப்படி

மாற்றம் எப்படி

சிஎஸ்கேவில் இந்த மாற்றமே பெரிய அளவில் எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் இன்று வாட்சனுக்கு பதிலாக சாம் கரன் ஓப்பனிங் இறங்கி உள்ளார். யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று டு பிளசிஸ் உடன் இணைந்து சாம் கரன் களமிறங்கி உள்ளார்.

வாட்சன்

வாட்சன்

இன்று சாம் கரன் ஓப்பனிங் களமிறங்கியதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம், சாம் கரன் சிறப்பான ஹிட்டர். சிஎஸ்கே பொதுவாக முதல் 5 ஓவர்களில் அதிக ரன் எடுப்பது இல்லை. இதனால்தான் தற்போது ஹிட்டர் சாம் கரனை தோனி ஓப்பனிங் இறக்கிவிட்டார்.

அனுப்பினார்

அனுப்பினார்

இறங்கி அடி.. விக்கெட் விழுந்தாலும் பிரச்சனை இல்லை.. முதல் பவர் பிளேவில் 50 ரன் எடுக்க வைத்துவிட்டு வா.. என்று தோனி அனுப்பி வைத்துள்ளார். அதேபோல் ஜெகதீசன், ஜாதவ் இல்லாத காரணத்தால் இன்று மிடில் ஆர்டர் வலிமையாக இல்லை. இதனால் வாட்சன் போன்ற அனுபவ வீரர்கள் ஒன் டவுன் இறங்கினால், மிடில் ஆர்டரில் ராயுடு போன்றவர்கள் இறங்க வசதியாக இருக்கும்.

வேறு என்ன

வேறு என்ன

பேட்டிங் ஆர்டரும் இதனால் வலிமை அடையும். அதெல்லாம் போக சாம் கரன் லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன் என்பதால்.. சிஎஸ்கேவில் லெப்ட் - ரைட் காம்பினேஷன் சரியாக இருக்கும். சிஎஸ்கேவில் ரெய்னா இல்லாத காரணத்தால் லெப்ட் - ரைட் காம்பினேஷன் இல்லாமல் இருந்தது. தற்போது சாம் கரன் அதை சரி செய்துள்ளார்.

Story first published: Tuesday, October 13, 2020, 21:57 [IST]
Other articles published on Oct 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+