Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எது உங்களை தடுக்கிறது? நட்பு பார்க்க இது நேரமில்லை.. தோனிக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. சிக்கல்!

துபாய்: எல்லா போட்டிகளை போலவே இன்றும் டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் ஓப்பனிங் சொதப்பி உள்ளது.

ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. வரிசையாக ஒவ்வொரு போட்டிகளும் கடைசி வரை திரில்லாக சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இன்று சிஎஸ்கே அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையில் துபாயில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது.

இதில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி தொடக்கத்தில் இருந்து நிதானமாக ஆடியது.

நிதானமான ஆட்டம்

நிதானமான ஆட்டம்

டெல்லி அணியில் ப்ரித்வி ஷா மட்டும் அதிரடியாக ஆடினார். மொத்தம் 43 பந்துகள் பிடித்த அவர் 64 ரன்கள் எடுத்தார். 9 பவுண்டரி, 1 சிக்ஸ்ர் என்று அதிரடி காட்டினார். தவான் 35, பண்ட் 37 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 20 ஓவரில் 3 விக்கெட் இழந்து 175 ரன்கள் எடுத்தது.

ஆனால சென்னை

ஆனால சென்னை

ஆனால் அதன்பின் இறங்கிய சென்னை தொடக்கத்தில் இருந்து மோசமாக திணறியது. எப்போதும் போல சென்னையின் பேட்டிங் இந்த முறையும் தொடக்கத்தில் சொதப்பியது. சென்னையின் இரண்டு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களும் மோசமாக பேட்டிங் செய்தனர். முரளி விஜய் மற்றும் வாட்சன் இருவரும் இந்த முறையும் ஏமாற்றம் அளித்தனர்.

பந்துகள் குடித்தனர்

பந்துகள் குடித்தனர்

இரண்டு பேருமே 31 பந்துகளை குடித்துவிட்டு வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தனர். கடந்த இரண்டு போட்டிகளிலும் சென்னையின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக சொதப்பினார்கள். முதல் 5 ஓவர்களை குடித்துவிட்டு அதன்பின், அடுத்து இறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுப்பதே இவர்களின் வேலையாக உள்ளது. இது கடைசியில் இறங்கும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கிறது .

நீக்கவே இல்லை

நீக்கவே இல்லை

வாட்சன் குறைந்தது போக போக ஐபிஎல் போட்டிகளில் ஆடுவார். அவர் பல ஐபிஎல் போட்டிகளில் தன்னை நிரூபித்து உள்ளார். ஆனால் முரளி விஜய் எந்த போட்டியிலும் ஆடுவது இல்லை. முரளி விஜய் போன்ற டெஸ்ட் வீரரை தொடர்ந்து அணியில் வைத்து இருப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. அவரை ஏன் நீக்கவில்லை.. எது தோனியை தடுக்கிறது.. விஜயிடம் நட்பு பாராட்டி அவரிடம் தோனி ''சாப்ட் கார்னர்'' காட்டுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

இன்னும் சிலர்

இன்னும் சிலர்

அதேபோல் ரெய்னாவிற்கு மாற்று என்று களமிறக்கப்பட்ட ரூத்துராஜ் சரியாக ஆடவில்லை. இன்னொரு பக்கம் எப்போதும் போல கேதார் ஜாதாவும் இந்த போட்டியில் சரியாக ஆடவில்லை. தொடர்ந்து மூன்று போட்டிகளாக இவர்கள் யாருமே சரியாக பேட்டிங் செய்யவில்லை. ஆனால் இவர்கள் மீது தோனி எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உடனே மாற்ற வேண்டும்

உடனே மாற்ற வேண்டும்

எல்லா போட்டியிலும் சிஎஸ்கே முழுக்க முழுக்க டு பிளசிஸை நம்பி மட்டுமே இறங்க முடியாது. மற்ற வீரர்களும் களமிறங்கி அதிரடி காட்ட வேண்டும். இல்லையென்றால் தோனி ஒவ்வொரு முறையும் திணற வேண்டிய கட்டாயம்தான் ஏற்படும். உடனே தோனி சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றங்களை செய்யவில்லை என்றால், இந்த தொடரில் கோப்பையை வெல்வதை சிஎஸ்கே மறக்க வேண்டியதுதான்.

Story first published: Friday, September 25, 2020, 22:54 [IST]
Other articles published on Sep 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+