Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொல்லியும் கேட்கவில்லை.. தவறு எல்லாம் தோனி மீது.. 2 வருடம் முன் எடுத்த முடிவு..அதிருப்தியில் சிஎஸ்கே

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தொடர்ந்து சொதப்புவதற்கு அணியில் சரியான மாற்று வீரர்கள் இல்லாததே காரணமாக பார்க்கப்படுகிறது.

2020 ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு மிக மோசமான தொடராக பார்க்கப்படுகிறது. இதுவரை சிஎஸ்கே விளையாடிய அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆப் சென்று உள்ளது.

இந்த நிலையில் இந்த வருடம் நடக்கும் தொடரில் சிஎஸ்கே பிளே ஆப் செல்வது சந்தேகம் ஆகியுள்ளது. இதுவரை நடந்த 10 போட்டிகளில் 7 போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

மோசம்

மோசம்

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தொடர்ந்து சொதப்புவதற்கு அணியில் சரியான மாற்று வீரர்கள் இல்லாததே காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது அணியில் ஒரு வீரர் பார்ம் இல்லாமல் கஷ்டப்பட்டாலோ அல்லது காயம் அடைந்தாலோ, தொடரில் இருந்து வெளியேறினாலோ இன்னொரு மாற்று வீரரை கொண்டு வருவது சிரமமான காரியமாக மாறியுள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

மற்ற அணிகளில் எல்லாம் ஆடும் 11 பேர் கொண்ட அணியிலும் சரி, வெளியில் பெஞ்சில் இருக்கும் அணியிலும் சரி சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள். ஆடும் அணியில் ஒரு வீரர் மோசமாக ஆடினால், வெளியே இருக்கும் வீரர்களில் ஒருவர் அணிக்குள் கொண்டு வரப்படுகிறார். ஆனால் சிஎஸ்கேவில் நிலைமை அப்படி இல்லை. ஆடும் 11 பேர் கொண்ட அணி மற்றும் கூடுதலாக 3 வீரர்களை தவிர பெரிதாக சிஎஸ்கேவில் வேறு யாருமே இல்லை.

இல்லை ஏன்

இல்லை ஏன்

இதற்கு இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்படுகிறது. இரண்டு வருடம் முன் தோனி எடுத்த சில முடிவுகள்தான் சிஎஸ்கே அணி தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இரண்டு வருடம் முன் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவின் வயதான வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டனர். வயதான வீரர்களை அணியில் எடுக்க வேண்டும் என்று தோனிதான் கோரிக்கை வைத்தார் என்கிறார்கள். இதை பலரும் விமர்சனம் செய்தனர் .

அனுபவம்

அனுபவம்

அனுபவ வீரர்களை அணியில் எடுப்பதில் தவறில்லை. ஆனால் அவர்களுக்கு சரியான மாற்று வீரர்களை எடுக்க சிஎஸ்கே தவறிவிட்டது, அதுதான் தவறு. தோனி சரியான மாற்று வீரர்களை எடுக்க மறுத்துவிட்டார். மூத்த வீரர்களுக்கு இணையான மாற்று வீரர்களை அப்போதே தோனி எடுத்து இருக்க வேண்டும். இரண்டு மூன்று இளம் வீரர்களையும் அணியில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்போது தோனி யார் பேச்சையும் கேட்கவில்லை.

மோசமான அணி

மோசமான அணி

இங்குதான் தற்போது சிஎஸ்கேவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் தற்போது வாட்சன், ஜாதவ் போன்றவர்கள் ஆடவில்லை என்றால் அவர்களுக்கு சரியான மாற்று வீரர்களை அணியில் இறக்க முடியவில்லை. அணியில் பெஞ்சில் இருக்கும் வீரர்களும் தற்போது சரியான பார்மில் இல்லை. இதெல்லாம் போக இன்னொரு பக்கம் ரெய்னா, ஹர்பஜன் போன்ற வீரர்கள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டனர்.

எடுக்கவில்லை

எடுக்கவில்லை

ஆனால் இவர்கள் வெளியேறிய பின் அவர்களுக்கான மாற்று வீரர்களை சிஎஸ்கே எடுக்கவில்லை. இவர்களுக்கு மாற்று வீரர்களை எடுக்க வேண்டாம் என்று தோனிதான் அழுத்தம் கொடுத்தார் என்றும் கூறுகிறார்கள். இதனால்தான் தோனி மீது சிஎஸ்கே கடும் அதிருப்தியில் உள்ளது என்று கூறுகிறார்கள். தோனி எடுத்த தவறான முடிவுகள்தான் அணியின் இந்த மோசமான நிலைக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, October 21, 2020, 19:03 [IST]
Other articles published on Oct 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+