Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிட்டையர் ஆன போதே இதையும் செய்திருக்க வேண்டும்.. காட்டிக்கொடுத்த ஐபிஎல்.. தோனி செய்த தவறு.. பின்னணி

துபாய்: சிஎஸ்கே கேப்டன் தோனி இந்த ஐபிஎல் சீசனில் அடுத்தடுத்து செய்து வரும் சில தவறுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

2019 தொடக்கத்தில் இருந்தே தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை சரிவை சந்தித்து வருகிறது. 2019ல் நடந்த உலகக் கோப்பை தொடரில் தோனி சரியாக பேட்டிங் செய்யவில்லை.

அந்த தொடர் முழுக்க தோனியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக தோனி அந்த தொடரில் விளையாடும் போதே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.

விமர்சனம்

விமர்சனம்

அந்த தொடரில் தோனியின் பேட்டிங்கில் போதிய ஆர்வம் இல்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது. பேட்டிங் செய்கிறார், ஆனால் ஆர்வமாக இல்லை என்று கூறப்பட்டது. கம்பீர், சேவாக் தொடங்கி சச்சின் வரை இந்த விமர்சனத்தை வைத்து இருந்தனர். இதனால் தோனி ஓய்வு பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கை

கோரிக்கை

அந்த உலகக் கோப்பை தொடருக்கு பின் தோனி கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. தற்காலிகமாக தோனி ரெஸ்ட் எடுத்தார். அதன்பின் மொத்தமாக கடந்த சில வாரங்களுக்கு முன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் மொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தே தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

தனது பேட்டிங் பார்ம் சரியில்லை. மோசமாக ஆடுகிறோம் என்று தெரிந்துதான் தோனி தனது கிரிக்கெட் பயணத்தை சர்வதேச போட்டிகளில் முடித்துக் கொண்டார் . இனிமேல் கிரிக்கெட் ஆட முடியாது என்பதுதால்தான் சர்வதேச போட்டிகளில் இருந்தே தோனி ஓய்வு பெற்றார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

பேட்டிங் சரியில்லை, பார்ம் திரும்ப முடியாது என்று தெரிந்து ஓய்வு முடிவை எடுத்த தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தோனி ஆட முடிவு எடுத்தார். இந்த வருடம் பேட்டிங் இறங்கிய தோனி சுத்தமாக பார்மில் இல்லை.

காட்டிக்கொடுத்தது

காட்டிக்கொடுத்தது

தோனி எவ்வளவு மோசமான பார்மில் இருக்கிறார் என்பதை ஐபிஎல் போட்டிகளே காட்டிக் கொடுத்துவிட்டது. இதுவரை நடந்த 10 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோனி 40+ ரன்களை எடுத்துள்ளார். எந்த போட்டியிலும் ஸ்டிரைக் ரேட் 120ஐ தாண்டவில்லை. தோனியால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. பந்தை கணிக்க முடியவில்லை.

வேகம்

வேகம்

அதேபோல் வேகமாக ஓடி ரன் எடுக்கவும் முடியவில்லை. மொத்தமாக தோனி பிட்டாக இல்லை என்பதை இந்த தொடர் காட்டிக்கொடுத்துள்ளது. இதனால் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதே ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெற்று இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் சிஎஸ்கே அணியாவது தப்பித்து இருக்கும். அந்த முடிவை தோனி எடுக்கவில்லை. இந்த தொடர் முடிந்த பின்னாவது தோனி ஓய்வு முடிவை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Story first published: Tuesday, October 20, 2020, 11:51 [IST]
Other articles published on Oct 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+